பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 31 கழார்த்துறையின் கவின் இத்தகைய புதுப்புனல் விழா நடைபெறும் காவிரித்துறைகளில் ஒன்று கழார்ப்பெருந்துறை. அது கடற்கரைக்கும் காவிரிப்பூம்பட்டினத்திற்கும் இடையே இருப்பதாகும். அப் பகுதியில் காவிரி வெள்ளம் க்ரைகளை மோதியழிக்கும் வேகத்துடன் விரைந்து செல்லும். அங்குக் கரைகள் அழிவுருமல் காக்கும் அடி பருத்த மருத மரங்கள் வானுற ஓங்கி வளர்ந்தனவாய் அடர்ந்து காணப்படும். இத் துறை யில்தான் அரசன் வந்து தங்கிப் புனல் விழாக் காண்பான். அதனல் கழார்ப்பெருந்துறையில் முழ வொலியும் விழவொலியும் மிக்கு விளங்கும். கழார்த்துறையில் கரிகாலன் ஓராண்டு நடைபெற்ற புனல்விழாவிற்குக் கரி காலன் தன் மகளாகிய ஆதிமந்தியையும் மருகனுகிய ஆட்டன் அத்தியையும் அன்புடன் அழைத்திருந்தான். அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு, மன்னன் கரிகாலன் கழார்ப்பெருந்துறையை நண்ணின்ை. கரைக்கண் அமைத்திருந்த காவல்மிக்க இடமொன்றில் சுற்றம் சூழ அமர்ந்திருந்து புனல்விழாக் காட்சிகளைக் கண்டு இன்புற்றுக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த சேரவேந்தகிைய அத்தியும் அங்கு நடை பெறும் புனல்விளையாட்டுக்களைக் கண்டு பூரித்தான். அத்தி ஆற்றில் பாய்தல் ஆட்டன் அத்தி ஆற்று வெள்ளத்தில் ஆற்றல் தோன்ற ஆடிப் பழகியவன். ஆதலின் அவனுல் அக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்க