பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கோப்பெருந்தேவியர் முடியவில்லை. அவ் வெள்ளத்தில் துள்ளியாடும் இளம் பிள்ளைகளைப் போலத் தானும் ஆட வேண்டுமென்று ஆசைப்பட்டான். உடனே புனல் விளையாட்டிற்குரிய ஆடையணிகளைப் புனைந்து கொண்டு ஆற்றில் குதித் தான். மன்னனும் மக்களும் வியந்து மகிழுமாறு நீரிலே நெளிந்தும் வளைந்தும் புரண்டும் சுருண்டும் துள்ளியும் தோய்ந்தும் நீண்ட நேரம் ஆடின்ை. அத்தி நீருள் மூழ்குதல் சேர வேந்தனுகிய அத்தியின் சீரிய புனல்விளையாட் டைக் கண்டு சோழ நாட்டு மக்கள் எல்லோரும் எல்லே யில்லாப் பேருவகை கொண்டனர். கரிகாற்சோழனும் மருகனது புனலாட்டைக் கண்டு உள்ளம் பூரித்தான். தந்தையின் அருகிலிருந்து கணவனது ஆடலேக் கண்ட ஆதிமந்தியின் சிங்தை இன்ப வெள்ளத்தில் மூழ்கியது. இங்ங்ணம் எல்லோரும் இன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென நீருள் மூழ்கிய சேர வேந்தனைக் காணவில்லே. இன்னும் சிறிது பொழுதில் எழுவான், சேய்மையில் சென்று எழுவான் என்று பலவாறு மன்னனும் சுற்றமும் எண்ணியிருந்தனர். நீண்ட நேர மாகியும் வெள்ளத்துள் மூழ்கிய வீரவேங் தனக் காணுமல் எல்லோரும் கலங்கினர். ஆதிமந்தி அலறுதல் காதற் கணவனைக் காணப்பெருத ஆதிமந்தி, அந்தோ ! என் கணவனேக் காணவில்லையே, துள்ளி யாடிய என் காதலனைக் காவிரி வெள்ளம் கவர்ந்து கொண்டதே ! யான் இனி என் செய்வேன்?' என்று அலறித் துடித்தவண்ணம் காவிரியின் கரைவழியே