பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 33 கடலை நோக்கி கடிது விரைந்து ஓடினள். சோழ வேந்தன் ஏவலாளரைக் கூவி, நீருள் மூழ்கிய சேரனேத் தேடுமாறு பணித்தான். அவர்கள் ஒடங்களேயும் கட்டு மரங்களையும் வெள்ளத்துள் விரைந்து செலுத்தி காலா பக்கங்களிலும் சேரனே நாடித் திரிந்தனர். அத்தியைப் பலரும் தேடுதல் அயல்நாட்டவணுகிய அத்தி, காவிரியின் விரைவை யும் வெள்ளப் போக்கையும் நன்கு அறிந்தவனல்லன். அதற்கு முன் காவிரிப் புனலில் ஆடியறியாதவன். அதல்ை பெருஞ்சுழல் ஒன்றில் அகப்பட்டு மீள முடியாது சுழற்றி இழுக்கப்பட்டான். வெள்ளத்தின் வேகம் அவனை விரைவில் நெடுந்தொலைவு இழுத்துச் சென்று விட்டது. வெள்ளப்போக்கில் சென்றேனும் சேய்மையில் கரை சேர்வான் என்று எண்ணிக் கரை வழியே மக்கள் பலர் அவனைத் தேடியவாறே விரைந்து நடந்து சென்றனர். ஆங்காங்கு நின்று கொண்டிருந்த மக்களிடமெல்லாம் அத்தியின் அடையாளம் கூறி, அத்தகையான் கரைசேரக் கண்டீரோ ? என வினவிய வண்ணம் விரைந்தேகினர். ஆதிமந்தி கணவனைத் தேடி அலைதல் காதலனைக் காணுது காவிரியின் கரைவழியே கதறிக்கொண்டு ஆருத் துயருடன் ஓடிவரும் ஆதிமந்தி இருகரைகளிலும் இருக்கும் ஊரெல்லாம் சென்று தேடினுள். எங்கும் அப் புதுப்புனல்விழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. ஆதலின் ஆங்காங்கே ஆட வரும் மகளிரும் பாங்குறக் கூடியாடிப் புனலாட்டு அயர்ந்துகொண்டிருந்தனர். அவர்களேயெல்லாம் ஆதி மந்தி அணுகியணுகி, ! உங்களைப் போல ஆடுவதில்