பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - கோப்பெருந்தேவியர் வல்லவன் என் கணவன் ; அவன் பெயர் அத்தி : யானும் உங்களைப்போல ஆடிமகிழும் இளம் பருவத் தினள், யான் மெலிந்துவருந்துமாறு அவன் புனலாட்டு விழாவில் வெள்ளத்துள் மறைந்து போயின்ை ; உங் களில் எவரேனும் அவனைக் கண்டீரோ?' என்று கேட்டுக்கேட்டு உள்ளம் ஓய்ந்தாள். பல ஊர்களைக் கடந்து சென்று தேடியும் அவனேக் காணுமையால் ஆதிமந்தியின் அறிவு திரிந்தது. பித்தேறியவளைப் போல அத்தியைக் கண்டீரோ? என் அத்தியைக் கண் டீரோ?' என்று எதிரே வருவாரை எல்லாம் கேட்டுக் கேட்டு ஏங்குவாளாயினுள். அத்தியை மருதி காண்டல் காவிரிச் சுழலில் மூழ்கிய ஆட்டன் அத்தியை வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்க் கடலில் சேர்த்து விட்டது அவன் உடல் வலி பெரிதும் உடையான்; நீரில் நன்கு ந்ேதத் தெரிந்தவன். ஆதலின் வெள்ளத் தின் ஈர்ப்பைத் தாங்கிக்கொண்டு, கடலில் நெடுந்துாரம் சென்று விட்டான். கடல் அலேகளின் இடையே தத்தளித்துக்கொண்டு வரும் அத்தியைக் கட்டுமரம் ஏறி, மீன் பிடிக்கும் வலைஞர்கள் கண்டெடுத்துக் கரை சேர்த்தனர். கடல் அலேகளால் மொத்துண்டு உணர் விழந்து கிடந்த அத்தியை. அவ் வலைஞர்கள் மருதியின் கன்னிமாடத்துக்கு அருகில் கொண்டு கிடத்தினர். அதனேக் கன்னிமாடத்தின் மேடையில் இருந்து கண்ணுற்ற மருதி கீழிறங்கிவந்து, நிகழ்ந்தது யாதென வினவினுள். செய்தியை அறிந்து அத்தியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினுள். தன் சித்தத்தில் குடிகொண்ட அத்தியே அவன் என்பதை அறிந்தாள். உடனே