பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 35. அவனேக் கன்னிமாடத்துள் எடுத்துச்சென்று அவன் மயக்கினைத் தெளிவித்தாள். உணர்வு பெற்ற அத்தி அருகிருந்த மருதியைக் கண்டு வியந்தான். காவிரிச் சுழலில் மூழ்கிக் கடலிடையே தத்தளித்த தன்னைக் கரை சேர்த்துக் காத்த வலைஞரை வாழ்த்தின்ை. தனக்குப் புத்துயிரளித்த மருதியை மனங் குளிரப் போற்றினன். அவளுடன் சில நாட்கள் அக் கன்னி மாடத்திலேயே தங்கி அகமகிழ்வுடன் வாழ்ந்து வரலான்ை. மருதியின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்குப் பின்னர்த் தன் காதலனே மீண்டும் கண்ட மருதி அவனுடன் பெருமகிழ்வோடு உரையாடி இன்புற்ருள். புதுப்புனல் விழாவில் அவனுக்கு நேர்ந்த அல்லலே அறிந்து அகங்குழைந்தாள். அவனைத் தன்னுடன் சேர்த்தற் பொருட்டே காவிரித் தாய் இச்சூழ்ச்சி செய்தாள் என்று கருதி மகிழ்ந்தாள். அம் மருதி உறையூரிலிருந்து தப்பி வந்தது முதல் நடந்தவற்றையெல்லாம் தன் காதலனுக்கு ஒதினள். அவன் தன் உள்ளத்தை மாற்றுதற்கு இரும்பிடர்த் தலையார் போன்றவர்கள் இயம்பியனவெல்லாம் திறம் பட உரைத்த பொய்ம்மொழிகள் என்பதை உணர்ந்து வருக்தின்ை. அதனால் இனி மருதியைவிட்டு அகல்வ தில்லையென முடிவு செய்தான். ஆதிமந்தி அத்தியைக் காண்டல் ஊர்தொறும் தன் காதலனேத் தேடி உழன்று வரும் ஆதிமந்தி கடற்கரைப் பக்கமாகவே வந்து விட்டாள். கற்பிற் சிறந்தவளாகிய ஆதிமந்திக்கு எவ் விதத்திலும் கணவனே உயிருடன் காண்போம் என்ற