பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - கோப்பெருந்தேவியர் உறுதி, உள்ளத்தே வேரூன்றி இருந்தது. ஆதலின் அவனேக் கண்டாலன்றிப் புகார் நகரத்துள் புகுவ தில்லை என்று துணிந்தாள். கணவனைத் தவிர வேறு நினைவின்றி ஊண் உறக்கம் ஒழிந்தவளாய் எங்கும் தேடித் திரிந்தாள். அங்கனம் தேடியவாறே நாகப் பட்டினத் துறையை கண்ணினுள். அவள் கடற்கரை மணல் வழியாக நடந்து செல்லும்பொழுது ஆங் கமைந்த மாடத்தின் மேடையில் அத்தியும் மருதியும் நிற்பதைக் கண்டாள். உடனே, ' அத்தி ! அத்தி!' என்று அரற்றியவண்ணம் மாடத்தின்மேல் ஓடோடிச் சென்று உணர்ச்சிமேலிட்டால் அவனே ஆரத் தழுவி ள்ை. காதலனேக் கண்ட களிப்பு மிகுதியால் பேசு தற்கு நாவெழாமல் பெரிதும் கண்ணிர் உகுத்து கின்ருள். அத்தியும் அவளேக் கண்டு செயலற்றவனுய்க் கண்ணிர் சிந்தி நின் முன். மருதியின் மாபெருந் தியாகம் சிறிது பொழுது கழிந்த பின்னர், நடந்தவற்றை யெல்லாம் அத்தியும் மருதியும் நவிலக்கேட்டு ஆதிமந்தி அகமுருகினள். ஆராக் காதலுடன் ஊரெல்லாம் தேடி உழன்று வரும் ஆதிமந்தியின் நிலைகண்டு அத்தியும் மருதியும் கெஞ்சம் ருெக்குருெக்குருகினர். அருமைக் கணவனை உயிருடன் அளித்த மருதியை ஆதிமந்தி மனமாரப் பாராட்டி கன்றி கூறினுள். அவ் இருவரின் நிலையையும் கண்ட மருதி தானும் மனமுருகினள். தான் உயிருடன் இருந்தால் அத்தி, ஆதிமந்தியுடன் வாழமாட்டான் என்பதை அறிந்த மருதி அவர்கள் இருவர்க்கும் தான் சொல்லத்தக்க நல்லுரைகளே அன்புடன் கவின்ருள். அவர்கள் அறியாவண்ணம்