பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 37 அலே பொங்கி வரும் கடலுள் வீழ்ந்து மாய்ந்தாள். அம் மருதி, ஆதிமந்தியின் நல்வாழ்விற்காகத் தன் னுயிரை மாய்த்து இன்னிசையை நாட்டினள். உறவினர் ஒருங்கு சேருதல் அத்தியும் ஆதிமந்தியும் மருதியின் கன்னிமாடத் திற்கு வந்திருப்பதாக மருதியின் தந்தையாகிய நெய்தல் நிலத் தலைவன் செய்தி அறிந்தான். அவர்களைக் காணும் வேணவாவுடன் மருதியின் கன்னிமாடத்திற்கு விரைந்தான். இச் செய்தியினை ஒற்றர் வாயிலாக உணர்ந்த கரிகாலனும் அவன் மாமனும் மக்களும் நாகப்பட்டினம் வந்துற்றனர். மருதியின் தந்தை அங்கு வந்துற்ற அனைவரையும் வரவேற்று உபசரித் தான். எல்லோரையும் அழைத்துக்கொண்டு மருதியின் கன்னிமாடத்தை கண்ணினன். அங்கே அத்தியையும் ஆதிமந்தியையும் கண்ணுற்ற அன்னேர் மருதியைக் காணப்பெருது மறுகினர். பணியாளர்கள் பக்க மெல்லாம் சென்று மருதியைத் தேடினர். கடற்கரைப் பக்கமாகச் சென்ற சிலர் அலேகளால் ஒதுக்கப்பட்டுக் கரையோரமாகக் கிடந்த மருதியின் உடலைக் கண்டு கவலேயுடன் வந்து தலைவனுக்குத் தெரிவித்தனர். மருதி கடலுள் வீழ்ந்து மாய்ந்த செய்தியைத் தெரிந்த அனைவரும் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். அவள் ஆதிமந்திக்குச் செய்த பேருதவியை எண்ணி யெண்ணிக் கண்ணிர் சொரிந்தனர். அனைவரும் கடற் கரை அடைந்து அவளது உடலுக்குச் செய்யத்தகும் கடன்களே ஆற்றி, அவள் தங்கியிருந்த கன்னிமாடத் திலேயே அதனை அடக்கம் செய்தனர்.