பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கோப்பெருந்தேவியர் பின்னர்க் கரிகாலன், அந் நெய்தல் நிலத் தலைவ னிடம் விடைபெற்றுத் தன் மகளேயும் மருகனையும் அழைத்துக் கொண்டு புகார் நகரை அடைந்தான். அத்தி உயிர் பிழைத்த செய்தியை நாட்டினர் அறியு மாறு பறைசாற்றினன். புகாரில் உள்ள கோவில் களில் எல்லாம் சிறப்பான பூசனைகளைச் செய்வித்தான். ஆதிமந்தியின் அருந்தமிழ்ப் புலமை சேரவேந்தனகிய ஆட்டன் அத்தியின் கோப்பெருக் தேவியாகிய ஆதிமந்தி அருந்தமிழ்ப் புலமையுடையாள். ஆதலின் அவள் காதலன் பிரிவால் கடுந்துயர் எய்தி ஊரெல்லாம் ஒடித் தேடி உழன்ற செய்தியை அகத் துறைப் பாவொன்ருல் அழகுற விளக்கியுள்ளாள். அவளது புலமை நலத்தைப் புலப்படுத்தும் அப் பாடல் குறுந்தொகை என்னும் பழந்தமிழ் நூலில் உள்ளது. தலைவி யொருத்தி, தானும் தலைவனும் பெற்று.மகிழும் களவொழுக்கத்தைத் தன் தோழிக்கு அறிவிக்கும் அறத்தொடு நிற்றல்' என்னும் துறையில் அமைத்துப் பாடும் ஆதிமந்தியின் பாடல் மிகவும் அழகு வாய்ந்ததாகும். 'மள்ளர் குழி இய விழவி னுைம் மகளிர் தழி இய துணங்கை யானும், யாண்டும் காணேன் மாண்தக் கோனே ; யானும்ஒர் ஆடுகள மகளே ; என்கைக் கோடு ஈர் இலங்குவளே நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும்ஒர் ஆடுகள மகனே.' -குறுக்தொகை, கடக் தலைவி தன் ஆருயிர்த் தோழியை அழைத்தாள். தன் களவொழுக்கத்தை மறைத்து வைத்தால் பெற் ருேர் பிறிதோர் ஆண்மகனுக்குத் தன்னை மணம்பேசி