பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டனத்தியின் தேவி 39 விடுவர் என்பதை அறிந்து அவளிடம் செய்தியைத் தெரிவித்தாள். தோழியே! என் கைவளே கழலு மாறு மெலியச் செய்தான் ஒரு தலைவன். அவன் ஒரு தலைசிறந்த ஆண்மகன் , சிறந்த குணங்கள் நிறைந்த செல்வன் , ஆடுகளம் சென்று ஆடி மகிழும் இயல் புடையான் ; ஆதலின் யானும் அவனுடன் ஆடி மகிழும் விருப்புடன் ஆடுகளம் சென்று அவனே நாடி னேன் வீரர் பலர் கூடியாடும் மற்போர் விழாக் களத்திலும் மகளிர் கூடியாடும் துணங்கைக் கூத்து நிகழிடத்திலும் அவனைத் தேடித் தேடிப் பார்த்தேன் ; எங்கும் அவனேக் காணேன் , யான் யாது செய்வேன் ? என்று கூறி வருந்தினுள். ஆதிமந்தியைப் பாராட்டினுேர் இத்தகைய புலமைடுலங் கனிந்த கோப்பெருங் தேவியாகிய ஆதிமந்தியின் வரலாற்றைப் பரணரும் வெள்ளிவீதியாரும் பைந்தமிழ் அகத்துறைப் பாக் களால் பாராட்டியுள்ளனர். சிலப்பதிகாரம் தங் தருளிய சேரர் குலமனியாகிய இளங்கோவடிகளும் தமது இனிய காவியத்தில் இக் கோப்பெருந்தேவியைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் இவ் ஆதிமந்தியின் தந்தை கரிகாற்பெருவளத்தான் எனவும், அவள் கணவனை ஆட்டன் அத்தி வஞ்சியிலிருந்து ஆண்ட சேரநாட்டுப் பேரரசன் எனவும், அவனைக் காவிரிப் புனல் கடிது இழுத்துச் செல்லத், தன் கற்பின் ஆற்றலால் அவனே மீட்டும் உயிருடன் காணப் பெற்ருள் எனவும், கற்புத் தெய்வமாகிய கண்ணகி பாராட்டிய கற்புடைய மகளிர் எழுவருள் ஆதிமந்தியும் ஒருத்தியாவள் எனவும் விளக்கமாகக் குறித்துள்ளார்.