பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கோப்பெருந்தே வியர் " மன்னன் கரிகால் வளவன்மகள், வஞ்சிக்கோன் தன்னேப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ ! என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழி இக்கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.' இங்ங்னம் வஞ்சினம் கூறும் கண்ணகியின் வாயிலாக ஆதிமந்தியின் கற்புத்திறத்தை அடிகளார் பொற்புற விளக்கியுள்ளார். இவ்வாறு கல்லிசைப் புலவர் பலரும் நயந்து போற்றும் நற்றமிழ்ப் புலமையும் இசை நாடகத் திறமையும் இனிது வாய்க்கப்பெற்ற கோப்பெருந் தேவியைக் காண்பது அரிதாகும். அங்ஙனமே அவ ளுக்கு வாய்த்த அரும்பெறல் கணவனுகிய ஆட்டன் அத்தியைப் போன்று முத்தமிழ்ப் புலமைசான்ற வித்தகத் திறல்படைத்த வீரப் பேரரசன் ஒருவனையும் காண்டல் அருமையாகும். இவர்கள் வாழ்க்கையின் இடையே புகுந்து, ஆதிமந்தியின் இனிய வாழ்விற் காகத் தனது வாழ்வையே தியாகம் செய்து உயிர்த்ேத உத்தமியாகிய மருதியைப் போன்ற மங்கையினையும் எங்கும் காண்பது அரிது. இவர்களது அரிய வாழ்வு இல்லற நெறியில் செல்லுவார்க்கு இனியதோர் எடுத்துக்காட்டாகும்.