பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. மாவண்கிள்ளியின் தேவி G-rgi வளவர் வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரி யாற்றின் நீர்வளத்தால் கவினுற்று விளங்குவது சோழநாடு. சோழ வளநாடு சோறுடைத்து' என்றே. சொல்லப்பெறும் கல்வளம் உடையது அக்காடு. இத் தகைய வளமிகுந்த காட்டை ஆண்ட மன்னரை வளவர் என்றே புலவர் வழங்கினர். இவர்கள் நிலத்தைக் கிள்ளி வளத்தைப் பெருக்கும் வல்லமையுடையவராத லின் இவர்களைக் கிள்ளி' என்றும் சொல்லிப் டோங் தனர். சோழர்குல முன்னேர் காவிரியின் கன்கொடை என்று கற்றவர் போற் றும் பெற்றியுடைய சோழநாட்டைத் தண்டி என்னும் ஆசிரியர் தமது நூலாகிய தசகுமார சரிதத்தில் 'சிபி தேசம்' என்று குறிப்பிட்டுள்ளார். தன்னே அடைக்கலம் புகுந்த புறவின் துயர் போக்கத் தன் உடல் தசையை அறுத்துக் கொடுத்தவகிைய சிபி வேந்தன் சோழர் குல முன்னேன் ஆவன். சிறந்த சிவபத்தனை முசுகுந்தன் என்பானும், வானத்தில் அசைந்துகொண்டிருந்த பகைவரது ஆதிலேச் சிதைத்த மாபெரும் வீரனாகிய தூங்கெயில் எறிந்த தொடித் தோள் செம்பியன் என்பானும் இச்சோழர் குலத்தைச் சேர்ந்தவரே. மகனை முறைசெய்த மன்னவகிைய மனுநீதிச் சோழனும் இக் குலத்தைச் சார்ந்த கொற் றவனே. காவிரியில் அணை கட்டிக் கால் பல வெட்டிச் சோழநாட்டைப் பெருவளப்படுத்தின்ை கரிகாற்பெரு கோ.-4