பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கோப்பெருந்தேவியர் வளத்தான். அதனால் அவன் திருமாவளவன் என்று ஏத்தப்பெற்ருன். இக் கரிகாலன் சோழர் குலத்தின் மாண்பை மலைமேலிட்ட மணிவிளக்கு ஆக்கிய மன்னர் பெருமானவன். பசிப்பிணி மருத்துவய்ை விளங்கிய பண்ணன் என்னும் பைந்தமிழ் வள்ளலை யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!' என்று வாயார வாழ்த்திப் பாடல் ஒன்று பாடினன் ஒரு சோழன். அவன் நல்லிசைப் புலமை வாய்ந்த கிள்ளிவளவன் என்பான். அவனுடைய புலமையையும் போர்த்திறமையையும் நாட்டைக் காக் கும் நல்லியல்பையும் வெள்ளேக்குடிநாகனர், ஆவூர் மூலங்கிழார், ஐயூர் முடவர்ை, எருக்காட்டுர்த் தாயங் கண்ணனர் போன்ற தமிழ்ப்பெரும் புலவர்கள் சிறப் புறப் பாடியுள்ளனர். உணர்ச்சியொத்தல் என்னும் உயர்ந்த நட்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இலங்கி வரும் கோப்பெருஞ்சோழன் என்பானும் இக் குலத் தைச் சார்ந்தவனே. மாவண்கிள்ளி மன்னகுதல் இங்ங்னம் அறிவும் திறனும் ஆட்சி நலனும் ஒருங்கே பெற்ற பேரரசர் பலர் தோன்றிய சோழ மரபில் மாவண்கிள்ளி என்னும் மன்னன் ஒருவன் சிறந்து விளங்கினன். இவனேச் சீத்தலேச்சாத்துனர் தமது மணிமேகலைக் காவியத்தில் நெடுமுடிக்கிள்ளி, வென்வேற்கிள்ளி, மாவண்கிள்ளி, வ்டிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி முதலிய பல பெயர்களாற் குறிப் பிடுகின்ருர். இவனுடைய தந்தையும் செங்குட்டுவன் தாயான நற்சோணை என்பாளும் உடன்பிறந்தவ. ராவர். ஆதலின், இவன் செங்குட்டுவனுக்கு மைத்