பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் தேவி 43 துனச் சோழன் ஆவான். இவன் தந்தை இறந்ததும் தாயத்தார் ஒன்பதின்மர் இவனுடன் போரிட்டனர். அதனே அறிந்த செங்குட்டுவன் அவர்களே நேரிவாயில் ாேன்ற இடத்தில் எதிர்த்து வென்முன். பின்பு தன் மைத்துனச்சோழனுகிய மாவண்கிள்ளிக்கு முடிசூட்டிச் சோழநாட்டின் மன்னன் ஆக்கினன். இவன் அரசு முறைகோடா ஆட்சி நலனும் மானம் காக்கும் மாண் பும் உடையவன். காரியாற்றங்கரையில் போர் இம் மாவண்கிள்ளிக்கு இளங்கிள்ளி என்னும் இளவல் ஒருவன் இருந்தான். அவன் சோழப் பேரர சின் வடபகுதியாகிய தொண்டைமண்டலத்தை, காஞ் சியைத் தலைநகராகக்கொண்டு அரசுபுரிந்து வந்தான். மாவண்கிள்ளி பட்டம்பெற்ற சில ஆண்டுகளில் பாண் டியன் ஒருவனும் சேரன் ஒருவனும் படையுடன் ஒருங்கு சேர்ந்து சோழனே எதிர்த்தனர். சோழநாட் டின் வடமேற்குப் பகுதியில் உள்ள காரியாற்றங்கரை யில் போர் நடந்தது. அப்பகுதி தொண்டை நாட்டைச் சார்ந்ததாதலின் இளங்கிள்ளி தன் படையுடன்சென்று கடும்போர் புரிந்தான். மாற்ருர் படைகளேயெல்லாம் வென்று வாகைமாலே சூடினன். இரு பேரரசரும் தோல்வியுற்ருேடினர். மாவண்கிள்ளியின் மாதேவி சோழவேந்தனுகிய மாவண்கிள்ளியின் கோப் பெருந்தேவியாக விளங்கியவள் சீர்த்தி என்பாள். இவள் பாணர் மரபைச்சார்ந்த அரசமகளாவள். இவளை மணிமேகலை நூலாசிரியர் மாவலியின் குலத்துதித்த மங்கை என்பார்.