பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கோப்பெருந்தேவியர் கெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன் அடியில் படியை அடக்கிய அங்காள் நீரில் பெய்த மூரி வார்சிலே மாவலி மருமான் சீர்கெழு திருமகள் சீர்த்தி என்னும் திருத்தகு தேவி. என்று அவளேப்பற்றிக் குறிப்பிட்டார் சீத்தலைச் சாத்தனர். சீர்த்தி பெற்ற செல்வன் அரசமாதேவியாகிய சீர்த்தியின் வயிற்றில் பிறந்த செல்வத் தனிமகன் உதயகுமரன் என்பான். இவன் ஆண்மையில் சிறந்த அரிய வீரன். ஒருகால் புகாரில் இந்திரவிழா நிகழ்ந்தபோது காலவேகம் என்னும் பட்டத்து யானே மதங்கொண்டு திரிந்தது. அதனை உதயகுமரன் பிறர் துனேயின்றித் தனியாகவே அடக்கி ஒடுக்கின்ை. இவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையிடத்துப் பெருங்காதல் கொண்டான். அவள் மலர் கொய்வதற்கு உவவனம் சென்றபோது அங்கே சென்று அவளது இளமை நலங் கனியும் எழிலின் திறத்தை அவள் தோழியாகிய சுதமதியிடம் பலவாறு வியந்துரைத்தான். உதயகுமரன் மணிமேகலையிடத்துக் கொண்ட காதல், அவன் உள்ளத்தே வெள்ளம்போல் பெருகி கிற்றலைக் கண்ட மணிமேகலா தெய்வம், தவத்திறம் பூண்ட அத் தையல்பால் கொண்ட மையலே விட் டொழிக்குமாறு கட்டுரைத்தது. எனினும் மணிமேகலை வின் பாட்டியாகிய சித்திராபதியின் சித்தம் உருக்கும் சொல்நயத்தால் அவன் கொண்ட காமம் சிறிதும். தணிந்திலன். ஆதலின் அவளே எவ்விதத்திலும் அடைய வேண்டுமெனப் பெருமுயற்சி செய்தான்.