பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் தேவி 45 உதயகுமரன் மணிமேகலையைக் காணுதல் அம் மணிமேகலை மணிபல்லவத்திவில் தான் பெற்ற அமுதசுரபி என்னும் அரிய தெய்வப் பாத்திரத் தைக் கையில் ஏந்திக் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள உலகவறவியை அடைந்தாள். அங்கிருந்து பசியால் வாடிய பலர்க்கும் அமுதசுரபியிலிருந்து பெருகிவரும் உணவுத்திரளே வயிருர ஊட்டி வந்தாள். இதை அறிந்த உதயகுமரன் தேரேறி, அவள் இருந்த ஊரம் பலமாகிய உலகவறவியை வந்துற்ருன். தங்தையை இழந்த பெருந்துயரால் இன்பவாழ்வைத் துறந்து, பிக்குணிக் கோலத்துடன் இருந்த பெண்ணுகிய மணி மேகலையைக் கண்டு, நீ எதற்காகத் தவக்கோலம் ஏற்றனே ?' என்று கேட்டான். மணிமேகலை, அவனே வணங்கி, இம் மக்கள் யாக்கை பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகிய இடும் பைகட்கு உறைவிடமாயது ; அவ் உண்மையை உணர்ந்தமையால் பிறவாது பேரின்பத்தைப் பெறு தற்கு உறுதுணை செய்யும் சிறந்த அறத்தைச் செய்யத் துணிந்தேன்!” என்று கூறி ஆங்கிருந்த சம்பாபதியின் கோயிலுள்ளே புகுந்தாள். மணிமேகலை வேற்றுருக் கொள்ளுதல் பின்னர், அம் மணிமேகலை தன்பால் கொண்ட காதல் மயக்கின. உதயகுமரன் ஒழிக்காது மீண்டும் மீண்டும் இருக்கும் இடம் காடி வருதலைக் கண்டு வருக் தினுள். மணிமேகலா தெய்வம் தனக்கு அருளிய மந்திரத்தின் துணையால் வேற்றுருக் கொள்ள விழைந் தாள். அங்ங்னமே அம் மந்திரத்தை ஒதிக் காய சண்டிகையின் வடிவம் தாங்கி வெளிப் போக்தாள்.