பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கோப்பெருந்தேவியர் அவள் வேற்றுருக் கொண்டதை அறியாத வேந்தன் மகன் மணிமேகலை கோயிலுள்ளேயே ஒளித்துக் கொண்டாள் என்று கருத்துட்கொண்டு பெயர்ந்தான். மணிமே கலை அக் காயசண்டிகையின் வடிவத் துடனேயே அமுத சுரபியைக் கையில் ஏந்தி எங்கும் செல்லலாள்ை. அவள் பசியால் வாடி மெலியும் யாவர்க்கும் உணவூட்டி அவருடைய மலர்முகம் கண்டு இன்புற்ருள். சிறைக்கோட்டம் அறக்கோட்டமாதல் ஒரு நாள் அவள் புகார் நகரிலுள்ள சிறைக் கோட்டத்தில் புகுந்து, அங்கே பசியால் வருந்துவோர்க் கெல்லாம் திருந்து மொழி கூறி, உணவு அருந்துமாறு செய்தாள். அவள் ஒரு பாத்திரத்திலிருந்தே பலர்க்கும் வேண்டுமட்டும் உணவை எடுத்துக் கொடுத்தலேக் கண்ட சிறைக்காவலர் பெரிதும் வியந்தனர். அக் காவலருள் சிலர் இவ் வியத்தகு செய்தியை வேந்தனுக்கு அறிவிக்க விரும்பினர். சீர்த்தியும் கிள்ளியும் சோழ மாதேவியாகிய சீர்த்தி சீரிய பேரெழில் ப்டைத்தவள். கணவன் உளங்கவரும் குணமும் அறிவும் கொண்டவள். ஆதலின் மாவண்கிள்ளியாகிய மன்னன் நாள்தோறும் அவளுடன் மலர்ப்பொழிலை அடைந்து ஆங்கு அவளோடு உரையாடி இன்புற்று மகிழ்வான். ஆங்கு வரிக்குயில் பாடுவதும் மாமயில் ஆடுவதுமாகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப் புறுவான். புதுமணம் கமழும் பூம்பந்தரின் கீழிருந்து அவளது பொன்முகத்தின் புன்சிரிப்பும் அன்பு கனியும் இன்மொழியும் கண்டு கேட்டு இன்புறுவான்.