பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் கேவி 4T சிறைக்காவலர் செய்தி கூறல் இங்ங்னம் ஒரு நாள் சோழ வேந்தன் தன் தேவி யாகிய சீர்த்தியுடன் பூம்பொழிற்கண் அமைந்த புது மலர் மண்டபத்தில் தங்கி இன்புற்றிருந்தான். அப் பொழுது சிறைக் காவலர் சிலர் விரைந்து வந்து வேந்தன் செவ்வி யறிந்து சேய்மையில் கின்று வணங் கினர். அரசே ஊழிதோறு ஊழி ஒளியொடு வாழி' என்று அவனே வாழ்த்தி நின்றனர். அரசன் அவர்களே நோக்கி, விேர் வந்த காரணம் யாது?’ என்று வின வின்ை. அவர்கள், அரசே! இந் நகரில் பன்னட் களாய் யானைத்தி என்னும் நோயால் வருந்தி உடல் மெலிந்து திரிந்து வரும் மடந்தை ஒருத்தி நம் சிறைக் கோட்டத்துள்ளே வந்து, தங்களே வாழ்த்தியவாறே தன் கையில் உள்ள பிச்சைப் பாத்திரம் ஒன்றே கொண்டு அங்கு வந்து மொய்க்கின்ற யாவருக்கும் உணவு ஊட்டுகின்ருள்; இவ் வியப்பினைத் தங்களிடம் தெரிவிக்கவே வந்தோம்,' என்றனர். மாவண்கிள்ளியும் மணிமேகலையும் சிறைக்காவலர் வியந்துரைத்த செய்தியைக்கேட் வேந்தன், 'அம் மங்கையை இங்கே அழைத்து வருக!” என்று ஆணையிட்டான். உடனே, அக் காவலர் காய சண்டிகை வடிவுடன் இருந்துவரும் மணிமேகலையை நெருங்கி, மன்னவன் ஆணையை அறிவித்தனர். அவளும் அரண்மனை அடைந்து அரசனேக் கண்டு வாழ்த்தி கின்ருள். அரசன், அவளே நோக்கி,' அருந்தவமுடைய மடங்தையே! நீ யார் : கின் கையிலுள்ள பாத்திரம் உனக்கு எங்கே கிடைத்தது?’ என்று கேட்டான். அதற்கு அவள், அரசே! நீடு வாழ்வாயாக! யான் ஒரு விஞ்சை மகள்; இந்நகரிலே வேற்றுருக் கொண்டு