பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கோப்பெருந்தேவியர் திரிந்தேன். இஃது ஒரு பிச்சைப் பாத்திரம்: இது தெய்வத் தன்மை வாய்ந்தது ; இதனே இக் நகர் அம் பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; எனது யானைத்தி என்னும் தீராப் பசி நோயைத் தீர்த்தது; பசியால் மெலிந்தவர்க்கு உயிர்தரும் உயர் மருந்தாக உள்ளது,' என்று சொல்லி கின்ருள். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குதல் அது கேட்ட அரசன், 'யான் செய்யவேண்டுவது யாது ?' என்று கேட்டான். உடனே மணிமேகலை, 'இந் நகரில் உள்ள சிறைக்கோட்டத்தை அழித்து அறவோர் வாழும் அறக்கோட்டமாகச் செய்தல் வேண்டும்' என்று வேண்டினுள். அரசன் அவள் விரும்பியவாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்ட மாக்கினன். அன்று முதல் புகார் நகரில் இருந்த சிறைச்சாலே பலவகை அறங்களையும் ஆற்றும் அறச் சாலையாக நின்று நிலவியது. - - உலகவறவியில் உதயகுமரன் இந் நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற உதயகுமரன் மீளவும் உலகவறவியை அடைந்தான். மணிமேகலை அங்கிருந்து வெளியே வரும்பொழுது அவளேக் கைப் பற்றித் தேரில் ஏற்றிக் கொணர்வேன் ; அவள் கற்ற விஞ்சைகளையும் சொற்ற அறவுரைகளேயும் கேட்பேன்’ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு அவ் உலக வறவியில் ஏறினன். அங்கே மணிமேகலை, காய சண்டிகையின் வடிவுடன் தன்னேச் சூழ்ந்து நின்ற ஏழை மாந்தரின் பசித்துயரை உணவளித்து மாற்றிக் கொண்டிருந்தாள்.