பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுப்புறை நாட்டு முன்னேற்றத்திற்கு காட்டு கங்கையர் முன் னேற்றமே முதற்காரணம் ஆம். கங்கையர் முன்னேற்றத் திற்கு அவர்பால் அமைந்த கற்பும் பொற்பும், ஈரமும் வீரமும், அறிவும் செறிவும், வாய்மையும் தாய்மையும் ஆகிய நற்பண்புகளே முதற்காரணம் ஆம். மங்கையர் நற்பண் புடையவராய் வாழ்ந்தால் அவர் பெற்று வளர்க்கும் அருமை மக்களும் அப் பண்புடையோாாய் வளர்வார். தாளாண்மை வேளாண்மை வாளாண்மையிற் சிறந்த இளைஞராய் வரு வார். எல்லாரும் இத்தகைய ஆடவராய் மகளிராய் ஒரு நாட்டில் இருந்தால் அங்காடு முன்னேற்றம் அடைந்த தன்ருே ? - மங்கையர் நற்பண்புடையவராக வரவேண்டுமெனில் பல நூல்கள் கற்கவேண்டும். பண்டைத் தமிழ்நாட்டுப் பெண் மணிகள் வரலாற்றையும் படிக்கவேண்டும். அன்றியும் சிறந்த மன்னர் பெருந்தேவியாய் வாழ்ந்த மங்கையர் வரலாறும் ஆராய்தல்வேண்டும். இவ் வுண்மை யுணர்ந்தே காட்டு கலம் கருதி மங்கையர் வரலாற்று நூல்கள் பல எழுதி எமது கழகத்தில் வெளியிட்டு வருகின்ருேம்.

  • கோப்பெருந்தேவியர் ” என்னும் இந் நூல் நாட்டு ஈலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் துணைபுரிவதாகும். மங்கையர் உலகத்திற்கு மாண்பு மிக்க கல்வழிகாட்டும் அாலாம். செறிவும் கிறைவும் செம்மையும் செப்பும்,