பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை அறிவும் அருமையும் பெண்பா லான ' என்ற தொல் காப்பியர் கூற்றிற்கேற்ற அறுவகைப் பண்பும் அமைந்து மன்னர் கோப்பெருங்கேவியராய் வா ழ் ங் த எண்மர் வரலாற்றை எடுத்துரைப்பது இது. இளமாணவர் மான வியர் கற்றுப் பயன் அடையவேண்டும் என்ற நன்ளுேக்கால் எளிய இனிய செக்தமிழ் உரைநடையில் எழுதப்பட்டது. இந் நூலே இயற்றிய ஆசிரியர் வித்துவான் திரு. அ. க. நவநீதகிருட்டிணன் என்பவர். இவர் நம் கழகத் திற்கு முன்னும் பல உரைநடை நால்கள் எழுதி உதவினர். இன்னும் பல நூல்கள் எழுதி உதவுவார் என்பதும் எங்கள் எண்ணம். அவர் எழுதிய பல நூல்கள் அச்சிட்டு வெளி வந்துள்ளன. அவை பள்ளியிலும் நூல் சிலையங்களிலும் பயில்வதைப் பலரும் அறிவார். இன்றும் இந்நூலை இயற்றிக் கழகத்திற்கு உதவினர். என்றும் கழகம் அன்னர்க்கு நன்றி பாராட்டுங் கடப்பாடு உடையது. இந் நூலை நாட்டு நலம் கருதும் இளைஞரும், பள்ளியிற் பயிலும் சிறுவர் சிறுமியரும், கற்பும் நற்பண்பும் வாய்ந்த கன்னியரும் வாங்கிப் படித்து மனமகிழ்ச்சியுடன் வாழ்க் கைப்பயன் பெறுக. இளைஞர் மன ஆக்கமே கழகத்தின் ஆக்கமெனக் கருதுகின்ருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்