பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணந்துரை தமிழகம் தலைசிறந்த பண்பாட்டிற்குப் பிறப்பிடமும் வளர்ப்பிடமும் சிறப்பிடமும் ஆகும். உயர்ந்த பண்பாட் டிற்கு ஊற்றிடமாய் ஒளிர்வோர் சிறந்த மகளிரே. அவர்கள் தாயாக இருந்து, தாம்பெற்ற சேய்களுக்கு ஊட்டும் சிறந்த பண்புகளே நாட்டிற்கு ஏற்றம் கல்குவனவாகும். அத்தகைய தாயருள்ளும் அரசர்குலத் தாயராய்க், கோப்பெருந்தேவியராய்த் திகழ்வோர் நாட்டிலுள்ள கங்கை யர்க்கு ஏற்ற வழிகாட்டிகள் ஆவர். "பழந்தமிழ் நாட்டுப் பெருந்தேவியர் பலர் சிறந்த பண்பினராய்த் திகழ்ந்து, நங்கையர் உலகிற்கே நன்னெறி காட்டியுள்ளனர். அத்தகைய அறிவுகலம் கனிந்த அாசமா தேவியர் எண்மருடைய சிறப்புக்கள் இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளன. இளமாணவர் உலகம் இவ் எட்டுக் கோப் பெருந்தேவியரின் சிறப்புக்களையும் விருப்புடன் படித்து அறியவேண்டும் என்னும் நன்னேக்கத்தால் இந்நூல் எளிய இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பெற்றுள்ளது? இற்றைத் தமிழகம் யான் எழுகிய சிறு நூல்களைப் பெரிதும் வரவேற்றுப்போற்றி வருவது கண்டு, உள்ளத்தில் கொண்ட ஊக்கத்தால் இந்நூலையும் எழுதத் துணிந்தேன். என் நூல்களை விருப்புடனும் சிறப்புடனும் வெளியிட்டு என்னே எழுத்துப் பணியில் இழுத்து கிறுத்தி வரும் உயர்திரு. வ. சுப்பையா பிள்ளை யவர்கள் நேசமும் இக் நூலின் தோற்றத்திற்கு உற்ற காரணமாகும். இந் நூலைக் கண்ணுறும் கலாசாலைத் தலைவர்களும் கன்னித்தமிழ்ப் புலவர்களும் கத்தம் பள்ளி மாணவர்க்கு இதனைப் பாடமாக்கிப் பயன்பெறுமாறு செய்வதுடன், எளியேனேயும் இப்பணியில் மேலும் ஊக்கி ஆதரித் தருளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன். தமிழ் வெல்க ! அ. க. நவநீதகிருட்டிணன்.