பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கோப்பெருந்தேவியர் அரசகுமாரன்மீது கொண்ட காதலினலேயே இவள் இந்நகரில் தங்கிவிட்டாள் போலும் என்று எண்ணி வெகுண்டான். அவன் புற்றில் அடங்கும் அரவம் போன்று அவ் உலக வறவியின் உள்ளே புகுந்து அற்றம் பார்த்து மறைந்திருந்தான். உதயகுமரன் வெட்டுண்டு வீழ்தல் அவன் அங்கு மறைந்திருத்தலை அறியாத மன்னன் மகன், மணிமேகலைதான் இங்ங்ணம் வேற்றுருக் கொண்டு விளங்குகின்ருள் : இவள் செய்தியை இடையாமத்தே இவண் வந்து ஆய்ந்தறிவோம்' என்று எண்ணி அரண்மனை நண்ணினன். இரவில் அனைவரும் உறங்கிய பின்னர் எவரும் அறியாது அரண்மனையினின்று நீங்கினன். விரைந்து நடந்து உலக வறவியை அடைந்தான். அரவம் கிடந்த புற்றுள்ளே புகுவான் போன்று உலக வறவியினுள்ளே மெல்லப் புகுந்தான். உடனே, அங்கு முன்பே சென்று இவன் வரவை எதிர்நோக்கிச் சினத்துடன் இருந்த காஞ்சனன், இவன் நம் மனேவியின்மீது கொண்ட காதலால் இவ்வேளையில் இங்குற்ருன்' என்று துணிந்து விரைந்து எழுந்து சென்று வாளால் அவன் தோளேத் துணித்து வீழ்த்தின்ை. கந்திற்பாவையின் கட்டுரை பின்பு காயசண்டிகையைக் கைப்பற்றிச் செல் வோம் என்று கருதிக் காஞ்சனன் அவள் அருகே சென்ருன். அப்பொழுது அங்குள்ள கந்திற்பாவை யொன்று, 'இவள் உன் மனைவியாகிய காயசண்டிகை யல்லள், மணிமேகலை கொண்ட மாற்று வடிவமே, இது என்று அறிவுறுத்தியது. உதயகுமரன் ஊழ்