பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் தேவி 51 வினேயால் உயிர் இழந்தானுயினும் நீ அவனே ஆராயாது வெட்டி வீழ்த்திய்ை , அதனுல் நீ மிக்க தீவினை செய்தாய். அவ்வினை நின்னே விடாது தொடர்ந்து வெந்துயர் விளக்கும்' என்று மேலும் அக் கந்திற் பாவை அவனுக்கு அறிவுறுத்தியது. அது கேட்டுக் காஞ்சனன் கவலை மிக்க உள்ளத்துடன் தன் நகருக்குச் செல்லலான்ை. உதயகுமரன், காஞ்சனன் கை வாளால் வெட் டுண்டு இறந்த செய்தியை மணிமேகலை அறிந்தாள். உடனே அவள் தான் கொண்ட வேற்றுருவை விட் டொழித்தாள். ஆங்கு இறந்து கிடந்த உதயகுமரன் பக்கம் சார்ந்து பெருமூச்செறிந்து புலம்பி வருந்தினுள். அப்போது ஆங்கிருந்த கந்திற்பாவை, அவன்பாற் செல்லாதே! பிறவித்துயரை அறுக்க முயலும் நீ அவன் இறந்தது பற்றி வருந்தற்க!' என்று அறிவுறுத்தியது. அது கேட்ட மணிமேகலை கவலையும் மயக்கமும் நீங்கி இருந்தாள். அவ்வளவில் கதிரவன் உதயமானன். முனிவர்கள் செய்தி அறிதல் பொழுது புலர்ந்ததும் சம்பாபதியின் கோவிலுக்கு வழிபாடு செய்யவந்த மக்கள் உலகவறவியில் அரசிளங் குமரன் வெட்டுண்டு இறந்து கிடப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் அச்செய்தியைப் பக்கம் அமைந்த சக்கரவாளக் கோட்டத்து முனிவர்கட்குத் தெரிவித் தனர். அம்முனிவர்கள் மணிமேகலையை அணுகி, ே இது பற்றி ஏதும் அறிவாயோ?” என்று கேட்டனர். அவள் நிகழ்ந்தவற்றை அறிவித்தாள். அவர்கள் உதயகுமரன் பிணவுடலையும் மணிமேகலையையும் தனியிடம் ஒன்றில் மறைத்து வைத்து, மன்னவன் அரண்மனை கண்ணினர்.