பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கோப்பெருந்தேவியர் கிள்ளிக்குச் செய்தியைக் கிளத்தல் சோழ வேந்தனகிய மாவண்கிள்ளியின் மாளிகை அடைந்த மாதவ முனிவர்கள் செவ்வி அறிந்து அவன் பக்கம் சேர்ந்தனர். அவன்பால் உதயகுமரன் இறந்த செய்தியை உடனே அறிவிக்காமல், கற்புடைய மகளிரையும் பொற்புடைய தவநெறி மாதரையும் காமுற்றுக் கெட்டொழிந்த காவலர் சிலருடைய வரலாறுகளே விரித்துரைத்தனர். அவர்களுடைய குறிப்பை அறிந்த மாவண்கிள்ளி, இன்றே அல்ல என்றெடுத் துரைத்து நன்றறி மாதவிர்! நயம்பல் காட்டினிர் இன்றும் உளதோ இவ்வினை உரைமின்' என்று வினவினன். அப்பொழுது அம்முனிவர்கள், தவத்திறம் பூண்ட மணிமேகலையிடம் மையல்கொண்டு அவள் இருந்த ஊரம்பலம் அடைந்து, ஆங்குக் காஞ்ச னன் என்பானுல் வெட்டுண்டு இறந்த உதயகுமரன் நிலையை எடுத்துரைத்தனர். கிள்ளியின் கட்டளை அது கேட்ட சோழவேந்தன் தன் மைந்தன் இறந்த தற்கு வருக்தினைல்லன். அவனது இழிசெயலைத் தெரிந்து அருவருத்தான். உடனே தன் பக்கத்தில் கின்ற படைத்தலைவனுகிய சோழிகானுதியை விளித் தான். தவறிழைத்த உதயகுமரனுக்கு யான் செய்யத் தக்க தண்டனையைக் காஞ்சனன் செய்தான்; ஆதலின் அவன் தகுதியற்றவன்; குலத்தில் உதித்த தனிமகனே நிலத்தில் கிடத்தி அவன்மேல் தேர்க்காலச் செலுத்தி முறை செய்த மன்னர் மன்னன் மரபில் இத்தீவினை யாளன் பிறந்தான்; என் குலத்திற்குப் பழியைத் தரும்