பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் தேவி 53. இவ் விழிந்த செய்தி, மற்றைய மன்னர் செவியகம் புகுதற்குமுன் அவன் உடலைப் புறங்காட்டில்கொண்டு போக்குக ; கணிகை மகளாகிய அம் மணிமேகலையை யும் சிறைப்படுத்துக' என்று பணித்தான். அங்ங்னமே அச் சோழிக ஏதிையும் அரசன் கட்டளையை நிறை வேற்றினன். - இராசமாதேவிக்கு இன்னுரை ஒரு குலத்திற்கு ஒரு மைந்தனய் விளங்கிய உதய குமரன் கொலேயுண்டு இறந்ததனுல் கோப்பெருங் தேவியாகிய சீர்த்திக்கு ஏற்பட்ட துயரத்திற்கு ஓர் எல்லேயில்லை. அவளது நிலையைக் கண்ட அரசன் வாசந்தவை என்னும் முதியவள் ஒருத்தியை அவளுக்கு, ஆறுதல் கூறித் தேற்றுமாறு விடுத்தான். பயன் தரும் மொழிகளே நயம்பட உரைக்கும் அக் கரை மூதாட்டி கோப்பெருந்தேவியைக் குறுகினுள். அவள் அரசியின் அடியில் வீழ்ந்துரைக்கும் அமைதியை விலக்கினுள். அத் தேவியை வணங்கி நின்று வாயார வாழ்த்தினுள். போர்க்களத்தில் பகைவருடன் வீரப்போர் புரிந்து விழுப்புண் பட்டு வீரசுவர்க்கம் புகுதலேயே சீரிதெனக் கொள்ளும் வீரமரபன்ருே சோழர் மரபு அங்ங்னம் போரில் இறவாது மூப்பானும் பிணியானும் இறக்கும் அரசர் யாக்கையினைத் தருப்பையில் கிடத்தி வாளால் போழ்ந்து அடக்கம் செய்யும் இயல்புடைய அரிய மரபில் பிறந்த நின்மகன் இறந்தவிதத்தை என் னென்பது ! நின்மகன் இறந்தது தன் கிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கவர்ந்தமை யாலும் அன்று காம மயக்கத்தால் கட்டழிந்து