பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கோப்பெருந்தேவியர் கெட்டொழிந்த அவனது இறப்பை எங்ஙனம் கூறு வது 1 மாநிலம் காக்கும் மன்னன் முன்னர் இம் மகனே இழந்ததற்கு வருந்தாதே !' என்று சொல்லிப் போயினள் அம் முதியாள். மாதேவி, மணிமேகலையை வஞ்சிக்கத் துணிதல் இராசமாதேவி ஒருவாறு உள்ளம் தேறினுள். உதயகுமரன் இறந்ததற்கு உற்ற காரணமாய் கின்ற மணிமேகலையை வஞ்சனேயால் கொல்லத் துணிந்தாள். அவள் புறத்தே மெய்யன்பும் தெளிந்த உணர்வும் பெற்றவள் போன்று நடித்தாள். ஒருநாள் அரசனை அணுகி அவன் அடியில் வீழ்ந்து தொழுதாள். செங் கோல் வேந்தே! மணிமேகலையின் பிக்குணிக் கோலத் தைக் கண்டு காமத்தால் அறிவு திரிந்து அலைந்த உதய குமரன் அரசாட்சிக்கு உரியனல்லன் அவன் அக் கொடுந் தொழிலால் இறந்தது தக்கதே பெறுதற்கரிய இளமை கலத்தைப் பயனற்றதாக்கிய பேரறிவுடைய மணிமேகலைக்குச் சிறை தக்கதன்று' என்ருள். மணிமேகலைக்கு மருந்துாட்டல் கோப்பெருந்தேவியின் வஞ்சகம் அறியாதவனகிய மாவண்கிள்ளி, 'கின் கருத்து அவ்வாருயின் அவளைச் சிறையினின்று விடுதலைசெய்வோம்,' என்று கூறினன். உடனே ஏவலரை விளித்து மணிமேகலையைச் சிறை நீக்குமாறு பணித்தான். சிறையினின்று வெளிப் போந்த மணிமேகலையை இராசமாதேவி மெல்லக் கொணர்ந்து தன் மாளிகையுள்ளே தங்குமாறு செய்தாள். பின்பு, மணிமேகலைக்குப் பித்துண்டாகு மாறு மருந்தொன்றை அருந்தக் கொடுத்தாள். அவள்