பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் தேவி 55 மறுபிறப்பை உணர்ந்தவளாதலின் அவளை அம் மருந்து ஒன்றும் செய்யவில்லே. கற்பை அழிக்க முற்படல் பின்னெரு நாள் இராசமாதேவி அன்னவளின் கற்பை அழிக்குமாறு கல்லா இளைஞன் ஒருவனேத் தூண்டினள். அவனுக்குக் கைங்கிரம்பப் பொன் னிந்து அவள் இருக்கும் அறைக்குள் விடுத்தாள். அவனது வருகைக் குறிப்பை அறிந்த மணிமேகலை வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை ஓதி ஆணுருக் கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கு வந்தவன், அரசி யின் அந்தப்புரத்தில் பிற ஆடவர் எவரும் குறுகார்; இங்கோர் ஆடவன் இருக்கிருன் , ஈது ஏதோ வஞ்சம்' என்று அஞ்சி ஒடின்ை. புழுக்கறையுள் புகுத்தல் பிறிதொரு நாள் அவ் இராசமாதேவி, பிணிவாய்ப் பட்ட மணிமேகலை உணவு கொள்ளாள் என்று பொய் யுரைத்து, அவளேப் புழுக்கறையுள் உணவு கொடாது அடைத்து வைத்தாள். அப்பொழுது மணிமேகலை தான் உணர்ந்த ஊணுெழி மந்திரத்தை ஓதி உடல் வருந்தாது இனிதிருந்தாள். இங்ங்ணம் அவளே அழித் தற்குச் செய்த திச்செயல்களுள் ஒன்றலுைம் அவள் இன்னல் எய்தாதிருக்கக் கண்ட இராசமாதேவி மிகவும் அஞ்சிள்ை. அவளிடத்தில் அமைந்த அற்புத ஆற்றலைக் கண்டு பெரிதும் வியந்து அவளே வணங் கிள்ை. 'மகனே இழந்த துயரம் தாங்கலாற்ருது நினக்கு இத் தீங்குகளைச் செய்தேன் ; நீ இவற்றைப் பொறுத்தருள வேண்டும்,” என்று மணிமேகலையைப் பலவாறு வேண்டினள்.