பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கோப்பெருசேவியர் அரசிக்கு அறவுரை கூறுதல் இரசமாதேவி தான் செய்த பிழைகளே உணர்ந்து பேசிய மொழிகளைக் கேட்ட மணிமேகலை அவளே அன்புடன் மன்னித்தாள். பின் அவ் வரசியை நோக்கித், தேவி முன் பிறப்பில் நின்மகன் இராகுலன் என்னும் பெயருடன் வாழ்ந்து திட்டி விடத்தால் தீங்குற்று இறந்தான் அப்பொழுது யானும் அவன் பொருட்டு உயிர் துறந்தேன் ; அக் நாளில் நீ யாது செய்தனே ? இப்பிறப்பில் அவனுக்காக அலறிப் புலம்பிய நீ முன் பிறப்பில் அவனுக்காக அழுதாயில்லேயே இப்பொழுது நீ கின் மகனுடைய உடற்கு அழுதனேயோ உயிர்க்கு அழுதனேயோ ? அவனது உடற்கு அழுதனேயேல் அதனே எடுத்துப் புறங்காட்டில் இட்டவர் யாவர் : உயிர்க்கு அழுதன. யேல் வினவழியே அது சென்று புகும் உடம்பினே உணர்தல் அரிதாகும்; அவ் வுயிர்க்கு நீ அன்பு செய்ய விரும்பினுல் உலகில் உள்ள எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும்,' என்று நல்லுரை பகர்ந்தாள். பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனே : உடற்கழு தனையோ உயிர்க்கழு தனேயோ ? உடற்கழு தினேயேல் உன்மகன் தன்னே எடுத்துப் புறங்காட்(டு) இட்டனர் யாரே : உயிர்க்கழு தனேயேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினேயால் தெரிந்துணர் வரியது ; அவ்வுயிர்க் கன்பினே யாயின், ஆய்தொடி ! எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்.' இங்ங்னம் இராசமாதேவிக்கு இன்னுரை வழங்கிய மணிமேகலை அவள் கொடுத்த இன்னல்களே எல்லாம் தான் பெற்ற மந்திரவன்மையால் வென்ற விதத்தை