பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவண்கிள்ளியின் தேவி 57. விளக்கிள்ை. முன்னப் பிறப்பில் தன் கணவகை இருந்த இராகுலனுக்கு இப் பிறப்பில் இராசமாதேவி தாயாவாள் என்பதை மணிமேகலை அறிவாள். ஆதலின் அவளது துன்பத்தைப் போக்கி கன்னெறியில் செலுத்தவேண்டும் என்று எண்ணியே அம் மணி மேகலை வான்வழிச் செல்லாமலும் வேற்றுருக் கொள் ளாமலும் இருந்தாள். மேலும் மணிமேகலை இராசமாதேவிக்குப் புத்த சமய உண்மைகள் பலவற்றை அறிவுறுத்தினள். 'காமம், கொலே, கள், பொய், களவு என்னும் ஐம் பெருங் குற்றங்களும் அல்லல் விளேப்பன ஆதலின் அவற்றை அறவே ஒழித்தல் வேண்டும் , அவற்றைத் துறந்தோரே சிறந்த சீலமுடையோர் ஆவர் ; செற் றத்தை அடக்கினேரே முற்ற உணர்ந்தோர் ஆவர் ; வறியார்க்கு விரும்பும் பொருளை வழங்குவோரே வாழ் பவர் ஆவர்; வருந்தி வந்தோர் அரும்பசி களைபவரே மறுமை உலகினே அறிந்தோர் ஆவர் : மன்பதைக்கெல் லாம் அன்பு செய்பவரே தத்துவத்தை உணர்ந்தோர் ஆவர் ; இவற்றை நன்கு அறிந்து நடப்பாயாக’ என்று இன்னுரை பகர்ந்தாள். மணிமேகலை ஞானமாகிய நீரினை இராசமாதேவி. யின் செவியில் வார்த்து அவளது துயரமாகிய தீயினை அவித்துத் தணித்தாள். அதல்ை மனம் தெளிந்த இராசமாதேவி மணிமேகலையை வணங்கினுள். அவள் அச் செயலைக் கண்டு பொருதவளாய், நீ என் கணவ னேப் பெற்ற தாய் மேலும் மன்னனுடைய மாபெருக் தேவி: ஆதலின் நீ என்னே வணங்குதல் தகுதியன்று' என்று கூறித் தானும் அவளே அன்புடன் வணங்கி கிள்ை. Gâr.—5