பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கோப்பெருந்தேவியர் அரசியின் பெருந்தகைமை பின்னர் மணிமேகலையின் பாட்டியாகிய சித்திரா பதி அரண்மனை அடைந்து, இராசமாதேவியையும் அவளுடன் இருந்த மணிமேகலையையும் கண்டாள். மணிமேகலையைத் தன்னுடன் அனுப்புமாறு இராசமா தேவியைப் பணிவுடன் வேண்டினுள். மணிமேகலை யால் நல்லறிவு பெற்ற அவள், கள்ளும் பொய்யும் காமமும் கொலேயும் உள்ளக் களவும் என்(று) உரவோர் துறந்தவை தலைமையாக் கொண்டங்ண் தலைமையில் வாழ்க்கை புலமையென்(று) அஞ்சிப் போங்த பூங்கொடி கின்னெடு போந்து கின்மனேப் புகுதாள்; என்னெடு இருக்கும்.' என்று மறுமொழி கூறிச் சித்திராபதியை அனுப் பினள். அறிவுடையோர் துறந்த இழிந்த செயல்களைச் சிறந்தனவாகக் கொண்டொழுகும் சித்திராபதியின் கணிகைவாழ்க்கையை இராசமாதேவி தலைமையில் வாழ்க்கையெனக் கடிந்துரைத்தாள். மேலும் கணி கையர் வாழ்வின் இழிவினைக் கண்டு அஞ்சி வெறுத்துத் துறவு பூண்ட தூயவளாகிய மணிமேகலை நின்னுடன் வரமாட்டாள் : என்னுடனேயே இருப்பாள் என்று இயம்பினள். இவ்வாறு கூறிய இராசமாதேவியின் சொற்களில் அவளது மனமாற்றமும் மாண்புமிக்க பெருந்தகவும் புலகிைன்றன அன்ருே !