பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. குலோத்துங்கன் தேவி வெண்ணிறு பரப்பிய வேந்தன் பொன்னி நாடெனப் புலவர் போற்றும் சோழ வளநாட்டை ஆண்ட மன்னருள்ளே இரண்டாம் குலோத்துங்கன் ஓர் இணையற்ற கொற்றவன் ஆவான். இவன் விக்கிரம சோழனின் வீரத் தனிமகன் ஆவான். இவன் விருதுப் பெயர்கள் பலவற்றைப் பெற்றுச் சிறந்து விளங்கினன். சிவபத்தியில் சிறந்த இம் மன்னன் தன்ட்ைடில் வெண்ணிற்று ஒளி விளங்கு மாறு செய்தான். காட்டு மக்கள் அனைவரும் சைவ நன்னெறியை மேற்கொண்டு ஒழுகுமாறு செய்தான். அதனால் மக்கள் இவனைத் திருநீற்றுச் சோழன்' என்று ஏத்தி மகிழ்ந்தனர். தில்லேக்கூத்தன் திருவருட் காதல் குலோத்துங்கன், தில்லைக் கூத்தப்பிரானிடத்துக் கொண்ட எல்லேயற்ற காதலால் தில்லையிலேயே சென்று, தன் தேவியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தான். நாள்தோறும் திருக்கோவிலுக்குச் சென்று, கூத்தப் பெருமானைத் தரிசித்து உள்ளம் குளிர்வான். அதனல் இம் மன்னனைத் தில்லைக்கூத்தன் திருவடி மலரில் சென்று ஊதும் வண்டு போன்றவன்' என்று கல் வெட்டுக்கள் பாராட்டிச் சொல்லும். இவனே தில்லைப் பேரம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான். ஆதலின் இவனைப் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்' என்று போற்றுவர். இவனுக்கே சிறப்பாக உரிய விருதுப் பெயர் அநபாயன் என்பதாகும்.