பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கோப்பெருந்தேவியர் கூத்தரும் குலோத்துங்கனும் இவ் அபாய குலோத்துங்கன் சிவபத்தியில் சிறந்து விளங்கியதோடு அறநெறி வழுவாத ஆட்சியை அமைதி யுடன் நடத்திவந்தான். இவன் காலத்தில் சோழநாடு செழிப்புடனும் சிறப்புடனும் திகழ்ந்தது. இவன் தன் அரசவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தரிடம் பல்லாண்டுகள் பைந்தமிழைப் பயின்று தேர்ந்தவன். செய்யுள் இயற்ற வல்ல சிறந்த புலமை பெற்றவன். ஆசிரியராகிய ஒட்டக்கூத்தர்பால் மட்டற்ற மதிப் புடையவன். இத்தகைய புலமையாளகிைய புரவல னுக்கு அமைச்சராக விளங்கியவரே சேக்கிழார். அவரது நூலறிவும் துண்ணறிவும் உலகறிவும் பத்தி மாண்பும் ஆகிய பன்னலங்களைக் கண்டே தொண்டர் புராணத்தை ஆக்குமாறு துாண்டின்ை. பாண்டியன் மகளைப் பெண்பேசுதல் சோழ வேந்தகிைய குலோத்துங்கன், பாண்டியன் மகளைத் திருமணம் செய்ய விரும்பினன். அங்காளில் மதுரையில் இருந்து, பாண்டி காட்டை ஆண்ட மன்னன் வரகுணன் என்பான். அவனுக்குத் திருமகள் போன்ற உருவுடைய ஒரே மகள் இருந்தாள். அவள் தியாகவல்லி என்னும் பெயருடையாள். அவள் பாண்டியன் அவைப் புலவராகிய புகழேந்தியாரிடம் கற்றுத் தமிழ்ப் புலமை பெற்றவள். அவளது அறிவும் அழகும் அரிய பண்பும் ஆகிய நலங்களைப் புலவர் வாயிலாகக் கேள்வியுற்ருன் குலோத்துங்கன். அவளேயே கோப்பெருந்தேவியாகக் கொள்ளவேண்டு மென உள்ளத்தில் உறுதி பூண்டான். ஆசிரியரும் அவைப் புலவருமாகிய ஒட்டக்கூத்தரிடம் தனது