பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலோத்துங்கன் தேவி 61 கருத்தைத் தெரிவித்தான். அவரையே பெண் பேசி வருமாறு பாண்டியனிடம் அனுப்பின்ை. கவியரசராகிய ஒட் டக் கூ த் தர் பாண்டியன் அவையை அடைந்தார். வரகுண பாண்டியனேக் கண்டு வணங்கினர். தம் மாணவனும் சோழ வேந்தனுமாகிய குமார குலோத்துங்கனின் கூரிய பேரறிவையும் சீரிய ஆட்சித் திறனையும் பாண்டிய னுக்குக் கூறினர். அவனுடைய திருமகளைக் குலோத் துங்கனுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேண்டினர். அது கேட்ட பாண்டியன் இச் சமயத்தில் இவரது புலமைத் திறனைச் சிறிது ஆராய்தல் வேண்டும் என்று எண்ணினன். உடனே அவரை நோக்கிப், 'பாண்டியர் குலத்துப் பாவையரை மணக்கத் தக்க மாண்பு, சோழ மன்னர்க்கு உண்டோ?” என்று வினவினன். அது கேட்ட புலவர் பெருமிதத்துடன் மறுமொழி பகர்ந்தார். சோழன் பெருமையைச் சொல்லுதல் சோழ மன்னர் ஏறும் கோரம் என்னும் குதிரைக் குப் பாண்டிய மன்னர் ஏறும் கனவட்டக் குதிரை இணையாகுமோ ? காவிரியாற்றிற்கு வையையாறு நேராகுமோ? சோழர் அணியும் ஆத்தி மாலைக்குப் பாண்டியர் அணியும் வேப்பமாலை ஒப்பாகுமோ? பேரொளிசெய்யும் கதிரவனுக்குத் திங்கள் நேராகுமோ? வீரர்க்குள் வீரகை விளங்குபவன் சோழனே, பாண்டி யனே ? சோழருடைய புலிக்கொடிக்கு முன்னே பாண்டியருடைய கயற்கொடி நிற்குமோ? ஊரெனப் படுவது உறையூர்' என்று புகழ்ந்து உரைக்கப்படுவது உறையூரோ, கொற்கையோ ? வளம் பொருந்திய