பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கோப்பெருந்தேவியர் சோழ நாட்டிற்குப் பாண்டியநாடு ஒப்பாக முடியுமோ? எவ்வகையிலும் சோழ நாடும் சோழ வேந்தருமே மிகச் சிறந்தவராவர். இக் கருத்துக்களே அமைத்து, கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானே கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானே ஆருக்கு வேம்புகிகர் ஆகுமோ அம்மானே ஆதித்தனுக்கு கிகர் அம்புலியோ அம்மானே வீரர்க்குள் வீரனுெரு மீனவனே அம்மானே வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ அம்மானே ஊருக் குறங்தைங்கர் கொற்கையோ அம்மானை ஒக்குமோ சோணுட்டைப் பாண்டிகா டம்மானே.” என்னும் பாடலைப் பாடி அமர்ந்தார். அப்போது அங்கிருந்த அருந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார் உள்ளத்தில் சினம் பொங்கியது. உடனே கூத்தரின் கூற்று முழுவதையும் மறுத்துப் பதிலிறுத்தார். புகழேந்தியார், பாண்டியன் பெருமையினைப் பகர்தல் முத்தமிழ் முனிவகிைய அகத்தியன் அமர்ந்து தமிழை வளர்த்தது பாண்டி நாட்டுப் பொதிய மலே யிலா, சோழ நாட்டு கேரி மலையிலா? சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தரு ளியது மதுரையிலா, உறையூரிலா? திருமால் பிறப் பெடுத்தது மீனகவா, புலியாகவா? சிவபெருமான் திருமுடியில் திகழ்வது திங்களா, செங்கதிரா? வெள்ளத்தை எதிர்த்துத் தமிழேடு விரைவில் கரை ஏறியது வையையிலா, காவிரியிலா? அச்சந்தரும் பேய்க்குப் பகையாக கி ன் று. அதனைத் தடுப்பது வேம்பா, ஆத்தியா? கடல் வணங்கியது பாண்டியன் பாதத்தையா, சோழன் பாதத்தையா? பாண்டியர்