பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கோப்பெருந்தேவியர் யொன்றைப் புகுத்தி உரைத்த கருத்து நயத்தைக் கண்டு களிப்புற்ருள். கதவைத் திறந்து வெளிவந்தாள். கலைகலம் உணர்த்திய புலவர்பெருமானைப் பணிந்தாள். அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்து உப சரித்தாள். கதவு திறப்பதை எதிர்நோக்கியிருந்த குலோத்துங்கனும் விரைந்து அந்தப்புரத்துள் புகுக் தான். புலவரையும் தேவியையும் பிழை பொறுக்கு மாறு பேரன்புடன் வேண்டினன். புலவரைத் தக்க வாறு போற்றிக் காக்க, அமைச்சர்க்கு ஆணையிட்டான். அதுகண்டதேவி, தான் கொண்ட ஊடல் தணிந்தாள். வேந்தனும் தேவியும் விருப்புடன் கூடிச் சிறப்புற வாழ்ந்தனர். தேவியின் தெளிந்த அறிவையும் சிறந்த பண்பையும் கண்ட வேந்தன், அவளைப் புவனமுழு துடையாள்' என்று போற்றிப் புகழ்ந்தான். இங்ங்ணம் குலோத்துங்கன் தேவியாகத் திகழ்ந்த தியாகவல்லி தீந்தமிழ்ப் புலமைச் செல்வியாக விளங் கிள்ை. தனக்குத் தமிழறிவை ஊட்டிய புகழேந்தி யாரைப் பெரிதும் போற்றினள். அவர் அடைந்த சிறைத்துன்பம் கண்டு சிங்தை கலங்கிள்ை. அவர் விடுதலையின் பொருட்டுத் தன் இன்ப வாழ்வைத் துறந்தாள். அவள் கொண்ட தமிழ்ப்பற்றையும் ஆசிரியர்டால் வைத்த பேரன்பையும் என்னென்பது !