பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலோத்துங்கன் தேவி 69 சிக்கு அறிவித்தனர். அது கேட்டுப் பெருமகிழ்வுற்ற கோப்பெருந்தேவியாகிய தியாகவல்லி ஆசிரியரின் வரவை எதிர்நோக்கி அந்தப்புரக் கதவின் அருகில் வந்து நின்ருள். அங்கு வந்த புகழேந்தியாரும் தம் அருமை மாணவியாகிய அரசியின் செவியில் விழுமாறு அமுதனேய பாடல் ஒன்றைப் பாடினர். இழையொன் றிரண்டு வகிர்செய்த நுண் ணிடை ஏங்தியபொன் குழையொன் றிரண்டு விழியணங்கே! கொண்ட கோபம்தணி; மழையொன் றிரண்டுகை மான பரணன்கின் வாயில்வந்தால் பிழையொன் றிரண்டு பொருரோ? குடியில் பிறந்தவரே!' 'நூலைப் பிளந்தாற் போன்ற நுண்ணிய இடை யினையும் கனகக் குழை அணிந்த காதளவு நீண்டுள்ள கண்களையும் உடைய தெய்வமகள் போன்ற தேவியே! நீ கொண்ட கோபத்தை நீக்குவாய்; மழையைப் போலக் கொடை வழங்கும் இரு கைகளையும் மான மாகிய அணிகலனையும் உடைய மன்னர்பெருமான் கின் அந்தப்புர வாயிலில் வந்து கின்ருல் அவன் செய்த பிழைகளைப் பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டுமன்ருே அதுதானே உயர்குடியிற் பிறந்த கற்புடை மாதரின் கடமையாகும்!” தேவி கவிநயம் தெரிதல் - சோழமாதேவி தன் ஆசிரியராகிய புகழேந்தியா ரின் ஆற்ருெழுக்குப்போன்ற அரிய பாட்டைக் கேட் டாள். அதன் கண் அமைந்த சொல்நயம் பொருள் ந்யங்களை அறிந்து மகிழ்ந்தாள். சிறந்த அறிவுரை