பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கோப்பெருந்தேவியர் பகைவர்க்கு இடியேறு போன்ற இரவிகுலத் தலைவ கிைய குலோத்துங்கன் நின் வாயிலுக்கு வருவான் : அப்போது கின் கைப்போது, தானே மலர்ந்து தாழைத் திறந்துவிடும் ; ஆதலின் நான் உன்னே வேண்டுவதில் பயனில்லாது போகும்,' என்றுகூறி நின்ருர். ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத்தாழ் கூத்தரின் பாடல், தேவியின் சினக் கனலுக்கு எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. அவர்மீது மேலும் அளவற்ற சினங்கொண்டாள் அத்தேவி. 'ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்று கூறியவாறே கதவின் மற்ருெரு தாழைப் பலமாக இட்டாள். அதுகண்ட கூத்தர் பெரிதும் திகைத்தார். அரசியின் சினம் தம்மீதும் பாய்ந்து பெரு கியதை அரசனுக்குக் கூறினர். இதற்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்று குலோத்துங்கன் கூர்ந்து நோக்கினன். பாண்டி நாட்டுப் பைந்தமிழ்ப் புலவர் புகழேந்தியாரைச் சிறையிலிட்டதே இதற்குக் காரண மாகும் என்று துணிந்தான். விரைந்து சென்று சிறைக் கோட்டத்தைத் திறந்து புகழேந்தியாரைக் கண்டு வணங்கின்ை. அறியாது செய்த பிழையைப் பொறுக்கு மாறு அன்புடன் வேண்டினன். தேவியின் சினத்தைத் தணித்து அவள் மனத்தைத் திருத்துமாறு புலவரை வேண்டிக்கொண்டான். புகழேந்தியார் சிறை விடுதலே புகழேந்தியாரும் அகமகிழ்ந்து சோழன் வேண்டு கோளுக்கு இசைக்தார். புகழேந்தியார் விடுதலைபெற்று அரசியைக் காணவரும் செய்தியைத் தோழியர் அர