பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலோத்துங்கன் தேவி 67 அரசி கொண்ட உறுதி அச் செய்தியைத் தெரிந்த தேவி மிகவும் வருந்தி ள்ை. கூத்தரின் அடாத செயலேக் கண்டு உள்ளம் கொதித்தாள். உடனே புலவரை விடுதலை செய்வதற்கு யாது செய்வதென எண்ணினுள். அரசனகிய குலோத் துங்கன் அந்தப்புரத்துள் வராதவண்ணம் கதவைத் தாழிட்டாள். ஆசிரியர் விடுதலைபெறும்வரை அரசனே அந்தப்புரத்துள் அனுமதிப்பதில்லை என்று உறுதி கொண்டாள். கூத்தர் கவி பாடுதல் குலோத்துங்கன் வழக்கம்போல் தன் தேவியைக் கானும் காதலுடன் அந்தப்புரத்தை நோக்கி வந்தான். அந்தப்புரத்தின் கதவுகள் அடைக்கப்பட் டிருப்பதைக் கண்டு வியந்தான். கதவு தாழிடப்பட் டிருப்பதன் காரணத்தைத் தோழியரை உசாவி அறிந் தான். தேவியின் ஊடலைத் தணிக்கப் பாவியல் புலவரே செல்லுதல் பண்டை வழக்கம். ஆதலின் அரசவைப் புலவராகிய ஒட்டக்கூத்தரை அழைத்து வரப் பணித்தான். அவர்பால் செய்தியைத் தெரிவித் தான். கூத்தர், தேவியின் சினத்தைத் தணித்தற்கு அந்தப்புரத்தின் அருகே வந்தடைந்தார். கதவைத் தட்டியவாறே கவிதை ஒன்றைப் பாடினர்: நானே இனியுன்னே வேண்டுதில்தல், நளினமலர்த் தேனே! கபாடம் திறந்திடுவாய்; திறவாவிடிலோ வானே றனைய இரவி குலாதிபன் வாயில்வந்தால் தானே திறக்கும்.கின் கைத்தலமாகிய தாமரையே." " தாமரை மலரில் தங்கும் திருமகளனைய தேவியே! கதவைத் திறப்பாய் ! நீ இப்போது திறவாவிடின்,