பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - கோப்பெருந்தேவியர் சிறைச்சாலையில் இருந்த புலவர்களைத் தனித்தனியே அழைத்துவரச் செய்தார். அவர்களிடம் தம் புலமைச் செருக்குத் தோன்றுமாறு பல வினுக்களைக் கேட்டார். எல்லோரும் அவர் நாணித் தலே கவிழுமாறு தக்க விடையிறுத்து கின்றனர். ஆதலின் அவர்களே விடுதலே செய்து விரட்டினர். இவர்கள் இத்தகைய புலமையுடன் அஞ்சாது பதிலிறுப்பதற்குப் புகழேந்தி யாரே காரணமாவார் என்று கருதினர். அதனால் அவ ருக்குப் புகழேந்தியார்மீது கொண்ட சினம் மேலும் பெருகியது. அவருக்கு உணவு முதலியவற்றைக் கொடுக்காதவாறு தடுத்தார். இங்ங்ணம் கூத்தர் செய்த கொடுமைகளே எல்லாம் புகழேந்தியார் பொறு மையுடன் அனுபவித்து வந்தார். அரசி, ஆசிரியர் துயரை அறிதல் சில திங்கள் கழிந்தன. குலோத்துங்கன் தேவி யாகிய தியாகவல்லிக்குத் தன் ஆசிரியரின் கினேவு வந்தது. மணம் பெற்றுப் புதிய வாழ்வில் மகிழ் வுற்றுத் திளைத்துக்கொண்டிருந்த தேவி சின்னட் களாகப் புலவரை மறந்துவிட்டாள். அவளது மறதி யால் புகழேந்தியார் சிறைத்துன்பத்தில் ஆழ வேண்டி வந்தது. திடீரென்று தன் ஆசிரியராகிய புகழேந்தி யாரைக் காணவேண்டுமென்று கருதிய தேவி, தோழி யரை அனுப்பி அவரை அழைத்து வருமாறு பணித் தாள். புகழேந்தியாரை அழைக்கச்சென்ற தோழியர், கூத்தரின் சூழ்ச்சியால் அவர் ஒராண்டுக் காலம் வரை சிறையில் அடைக்கப்பட்டு வருந்தியிருக்கும் செய்தியை ஆராய்ந்து வந்து அரசிக்குத் தெரிவித்தனர்.