பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலோத்துங்கன் தேவி 65 தார். குலோத்துங்கன் தன் தேவியொடும் தீங்தமிழ்ப் புலவரொடும் சோழ நாட்டை அடைந்தான். பாண்டி நாட்டிலிருந்து மணக்கோலத்துடன் தன்னட்டில் புகும் மன்னவனே மக்களெல்லாம் மகிழ் வுடன் வரவேற்றனர். தலைநகராகிய உறையூரின் புறத்தே ஒட்டக்கூத்தர், அமைச்சர் முதலான அரசியல் சுற்றமுடன் வந்து எதிர்கொண்டு வரவேற் ருர், அரசனுடன் புகழேந்தியாரும் போந்திருப்பது கண்டு பொருமை கொண்டார். இனித் தமது புகழ் குன்றிவிடுமோ என்று உள்ளம் கன்றினர். பல சூழ்ச்சிகள் செய்து புகழேந்தியாரைச் சிறையுள் தள்ளி விட்டார். இச்செய்தியைச் சோழமாதேவி அறியாள். சிறைச்சாலையில் செந்தமிழ்ப்பணி சிறைச்சாலையில் அடைக்கப்பெற்ற செந்தமிழ்ப் புலவர் அங்கிருந்த பலரையும் நோக்கினர். அவர்கள் எல்லோருமே ஒட்டக்கூத்தரின் சூழ்ச்சியால் சிறை செய்யப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து வருந்தினர். அடுத்து வரும் நவராத்திரி விழாவிற்குள் அவர்கள் எல்லோரும் கற்றமிழ்ப் புலமை பெற்றுக் கூத்தரின் வினுக்களுக்குத் தக்க விடையிறுக்க வேண்டும் , இன் றேல் அவர்கள் காளிக்குப் பலியிடப்படுவர் என்ற செய்தியை உணர்ந்தார். அன்று முதல் புகழேந்தியார் சிறையுள் இருந்தவர்க்கெல்லாம் செந்தமிழ் நூல்களைக் கற்பிக்கத் தொடங்கினர்; அவர்கள் அனைவரையும் சில நாட்களில் சிறந்த புலவர்களாக்கி விட்டார். கூத்தரின் கோபம் நகரில் நவராத்திரி விழாத் தொடங்கியது. ஒட்டக் கூத்தரின் உள்ளம் சினத்தால் பொங்கியது. அவர்