பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கோப்பெருக்கேவியர் நாளும் அவன் கைவேலை எறிவதில்லை என்பதை அறிந்தே சோழன் முதுகிற்குக் கவசம் அணிவதில்லை' என்று நகைச்சுவை தோன்றக் கூறி அவையோரை மகிழ வைத்தார். தியாகவல்லி கோப்பெருந்தேவியாதல் பின்னர், ஒட்டக்கூத்தர் திருமணப் பேச்சைத் தொடங்கினர். குலோத்துங்கன் புலமை கலம் பற்றித் தெரிந்த புகழேந்தியார், தம் மாணவியாகிய பாண்டி யன் மகளே அவனுக்கே மணம் செய்து கொடுத்தல் வேண்டுமெனப் பாண்டியனே வேண்டினர். வரகுண ணும் திருமணத்திற்கு உடன்பட்டான். திருமண நாளும் குறிக்கப்பெற்றது. பாண்டியன் அரண்மனை யிலேயே குலோத்துங்கனுக்கும் தியாகவல்லிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பாண்டியன் மகள் சோழனின் கோப்பெருங்தேவியானள். அரசன் சோழநாடு அடைதல் சில நாட்களில் குலோத்துங்கன் தன் காட்டிற்குப் புறப்பட்டான். தேவியாகிய தியாகவல்லிக்குக் கணவ னுடன் செல்லுவதில் களிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அறிவூட்டிய புலவர் பெருமானுகிய புகழேந்தியாரைப் பிரிவதற்கு அவள் வருந்தினுள். அவளது கவலேக் குறிப்பை அறிந்த பாண்டியன் தோழியர் வாயிலாக மகளின் மனக்கருத்தைத் தெரிந்தான். உடனே புகழேந்தியாரை அழைத்து அவரையும் தன்மகளுடன் சோழநாட்டிற்குச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டான். மாணவியாகிய தியாகவல்லியிடத்துப் பேரன்பு பூண்ட புலவர் பெருமானும் அதற்கு இசைக்