பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கோப்பெருந்தேவியர் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும் மன்னெயில் ஆங்தையும் உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆத னழிசியும் வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண்போல் கண்பிற் கேளிர்.’ என்னும் அவனது பாடற் பகுதியால் மாவன், ஆங்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலியோர் அவனுக்குச் சிறந்த நண்பர்களாய் இருந்தனர் என்பது புலகுைம். அறிவும் அழகும் அமைந்த தேவியார் வீரத்தினும் புலமையினும் வீறு பெற்று விளங்கிய இப் பூதப்பாண்டியனுக்குக் கோப்பெருந்தேவியாக வாய்த்த கோதையார் பெருங்கோப்பெண்டு என்று புலவர்களால் ஒருங்கு புகழப்பெற்ற பெருங்குணச் செல்வியாராவர். பூதப்பாண்டியனேப் போன்றே அவன் தேவியாரும் தெளிந்த புலமை நலங்கனிந்தவ ராவர். நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசையில் ஒருவராக வைத்து எண்ணப்பெறும் திண்ணிய புலமை யுடையர். இத்தகைய புலமை நலத்துடன் திருமகள் போன்ற உருவெழில் கலனும் இனிது படைத்தவர். இவ் உண்மையினேப் பூதப்பாண்டியனே. தனது பாட வில் புலப்படுத்துகின்ருன். அவர்ப்புறம் காணேன் ஆயின் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக." என்று கூறும் அவனது வஞ்சினத்தில் பெருங்கோப் பெண்டின் பேரழகினேப் பேரமர் உண்கண் இவள் என்ற தொடரால் கயம்படப் பேசுகின்ருன். பெண் னிற்குக் கண்களே பேரழகைச் செய்வன. அகன்று