பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் கேவி 83 மக்களும் உணர்ந்து உய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தால் சிறந்ததோர் பாடலாக அதனைப் பாடி வைத்தான். அங்ங்னம் நெடுஞ்செழியன் உலகினர்க்கு உரைத்ததோடு மட்டும் நில்லாமல் தன் காட்டு மக்களுக்கெல்லாம் சிறந்த கல்வியை ஊட்டின்ை. அதனால் அவனது அரசவைக்கண் சீத்தலைச் சாத்தனர் போன்ற செந்தமிழ்ப் புலவர் இருந்து அணிசெய்தனர். கல்விச் சிறப்பு 'தாய், தான் பெற்ற மக்கள் பலருள் கல்வியால் சிறந்தவனிடத்தே மிகுந்த அன்பைக் காட்டுவாள். பொல்லாத பிள்ளையாக இருந்தாலும் தள்ளாத நல்லியல்பை உடையவளாகிய தாய் கல்விச் சிறப்பின் காரணமாகப் பிள்ளைகளிடத்துக் காட்டும் அன்பில் வேற்றுமை இருக்கத்தான் செய்யும். ஒரே குடியில் பிறந்த மக்கள் பலரில் பருவத்தால் மூத்தவனே அறிவுடையோர் வருகவென்று வரவேற்று உபசரியார். அவருள் கற்றவன் எவனே அவன் காட்டும் நன்னெறியை அரசனும் கடைப்பிடித்து ஒழுகுவான். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைக் குலத்துள்ளும் தாழ்குலத்தில் பிறந்த ஒருவன் கல்வியிற் பெரியவயிைன் மேற்குலத்தவனும் அவனே வழிபட்டுப் பின்பற்றி ஒழுகுவான். ஆதலின் எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும். ஆசிரியனுக்குத் துன்பம் வந்தவிடத்தில் அதனைப் போக்கத் துணை புரிந்தும், அவனுக்கு வேண்டும் அரும்பொருளைக் கொடுத்து உதவியும், அவன் விரும்பும் பணிவிடை களே வெறுப்பின்றிச் செய்தும் அவன்பால் கல்வி கற்றல் நலமாகும்.'