பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் கேவி 85. துடன் பொற்கொல்லர் பலர் புடைசூழ நடைபயின்று வரும் விருதுபெற்ற பொற்கொல்லன் ஒருவனேக் கண் ணுற்ருன். இவன் அரண்மனேன்யச் சார்ந்த, தொழில் நுட்பம் தேர்ந்த பொற்கொல்லன் போலும் என்று எண்ணிக் கோவலன் அவனே நண்ணினன். கையி லிருந்த சிலம்பினை அவன்பாற் காட்டி, இச்சிலம்பின நீ விலைமதிக்க வல்லாயோ?' என்று வினவின்ை. சிலம்பினை நோக்கிய பொற்கொல்லன் தான் வல்லதைலேப் பணிவுடன் தெரிவித்து கின்றன். உடனே கோவலன் அச்சிலம்பினைப் பொற்கொல்லன் கையிற் கொடுத்தான். அதனை வாங்கிய பொற் கொல்லன் அதன் எழிலமைந்த தொழில் நுட் பத்தைக் கூர்ந்து நோக்குவான் போலப் பன்முறை முன்னும் பின்னும் மாறிமாறி கோக்கினன். இது கோப்பெருந்தேவிக் கல்லது பிறர்க்கு ஏற்புடைத் தன்று; இதனை யான் அரசற்குத் தெரிவித்து வருமள வும் விேர் இவ்விடத்தில் இருப்பீராக’ என்று கூறி, ஒரிடத்தைக் கோவலனுக்குக் காட்டி அகன்ருன். அவன் முன்னர்ப் பாண்டியன் கோப்பெருந்தேவியின் சிலம்பு ஒன்றை வஞ்சித்த கொடியவனதலின் இச் சிலம்பினே மன்னனுக்குக் காட்டித் தப்பித்துக் கொள்ள முயன்ருன். பாண்டியன் அரண்மனையை நோக்கி விரைந்து நடந்தான். பொற்கொல்லன் புரவலனக் காண்டல் பொற்கொல்லன் அரண்மனையுள் புகுந்த சமயத் தில் பாண்டியன் தன் தேவியின் ஊடல் தணித்து இன்பூட்டும் வேட்கையுடன் அந்தப்புரம் நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். அந்நிலையில்