பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கோப்பெருக்கேவியர் பொற்கொல்லன் அரசனை வணங்கி வாழ்த்தி, ‘அரசே! கம் அரண்மனையிலிருந்த சிலம்பைத் திருடிய கள்வன் அடியேனுடைய குடிசையில் வந்திருக்கிருன்,” என்று கூறினன். ஊழ்வினை பயனுரட்டும் காலமாதலின் பாண்டியன் சிறிதும் சிந்தியாமல் காவலாளரைக் கூவி அழைத்தான். தேவியின் சிலம்பு இவன் கூறும் கள்வன் கையிடத்தே இருக்குமாயின் அவனேக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக என்று கட்டளையிட்டு கடந்தான். காவலாளர்க்குக் கோவலனேக் காட்டல் பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்ததென்று கருத்துட்கொண்டான். அங்கு கின்ற காவலாளருடன் கோவலன் இருந்த இடத்தை அடைந்தான். இவர்கள் அரசன் ஆணையால் சிலம்பு காண வந்தவர்கள்' என்று காவலாளரைக் கோவலனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். சிலம்பினே அவர்கட்குக் காட்டுமாறு செய்தான். அவர்களைத் தனியே அழைத்துச் சென்று சிலம்பின் சிறப்பை விளம்புவான் போன்று கோப் பெருந்தேவியின் சிலம்புடன் ஒப்புமை கூறினன். கோவலன் கொலேயுண்ணல் அக்காவலாளர் கோவலன் முகக்குறி முதலிய வற்றைக் கூர்ந்து கோக்கினர். இவன் கள்வனல்லன்; கொலைப்படுதற்கு உரியனுமல்லன்' என்று கூறிப் பொற்கொல்லன் கருத்தை மறுத்தனர். அது கண்ட பொற்கொல்லன் அக்காவலாளரை இகழ்ந்துரைத் தான். இவன் கள்வனே எனப் பற்பல காரணங்கள் காட்டி வற்புறுத்தின்ை. அப்பொழுது அவருள் கொலேயஞ்சாத கொடியவன் ஒருவன் விரைந்து