பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் தேவி 87 சென்று கோவலனைத் தன் வாளால் வீசினன். ஊழ் வினை உருத்து வந்தமையால் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான். பாண்டியன் நெடுஞ்செழியனது வளேயாத செங்கோல் வளைந்தது. நிலமகள் நீள்துயரடைந்தாள். கோப்பெருந்தேவியின் கனவு கோவலன் கொலேயுண்பதற்கு முக்திய நாள் இரவில் பாண்டியன் கோப்பெருந்தேவி கொடியதொரு கனவு கண்டாள். மன்னனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் இற்றுத் தரையில் விழுந்தன. கொற்ற வாயிலிற் கட்டிய மணி தட்டாது ஒலித்தது. கதிரவனைக் காரிருள் விழுங்கியது. இரவில் வானவில் எழுந்தது. பகலில் விண்மீன்கள் எரிந்து விழுந்தன, எட்டுத் திக்கும் அதிர்ந்தன. இங்ங்னம் அவள் கண்ட கனவினைத் தோழியரிடம் கூறினுள். இதல்ை கம் நாட்டிற்கும் அரசனுக்கும் வரக்கடவதாகிய துன்பம் ஒன்று உண்டு ; அதனை யாம் அரசனிடம் அறிவிப் போம்,' என்று கூறிக் கோப்பெருங்தேவி அரசவை குறுகினள். அரியணையில் அமர்ந்திருந்த பாண்டியன் பக்கம் சார்ந்து, தானும் அவனருகில் அமர்ந்தாள். தான் இரவில் கண்ட கனவினே அரசனுக்கு அறி வித்து என்ன நேருமோ? என கெஞ்சம் நடுங்கிள்ை. தேவியின் நடுக்கம் கண்ட மன்னன் இன்மொழிகளால் அன்னவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். கண்ணகி மன்னனைக் காணுதல் இவ்வேளையில் வாயிற் காவலன் ஒருவன் அரசவை புகுந்து அரசனை வணங்கி வாழ்த்தின்ை. அவன் வாயிலில் வந்து நிற்கும் கண்ணகியின் வரவை அரசற்கு அறிவித்தான். அரசன் அவளே உள்ளே