பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கோப்பெருந்தேவியர் அனுப்புமாறு அக்காவலனைப் பணித்தான். கண்ணிரும் கம்பலையுமாய்க் கண்ணகி மன்னன் முன்னர் வந்து கின்ருள். கண்ணகி வழக்குரை அவளேக் கண்ணுற்ற மன்னவன், ' கண்ணிர் பெருக எம் முன் வந்து கிற்கும் பெண்ணே ! நீ யார்?" என்று வினவினன். உடனே அக் கண்ணகி, ஆராய்ச்சி இல்லாத அரசனே கூறுகின்றேன். விண்ணவரும் வியக்குமாறு ஒரு புருவின் துயரினைப் போக்க வேண்டித் துலேபுக்க சிபி வேந்தனும், கன்றினை இழந்த பசுவின் கண்ணிர் தன் நெஞ்சைச் சுட்டமையால் அக் கன்றுக்கு ஈடாகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்று முறை செய்த மனு வேந்தனும் செங்கோல் செலுத்திய சிறப்புடைய புகார் என் பதி யாகும். அப் பதியில் பெருங்குடி மரபில் தோன்றிய மாசாத்துவான் என்னும் வணிகன் மகனுகப் பிறந்து, வாழ்தல் வேண்டி ஊழ்வினை செலுத்த நின்னகர் அடைந்து, என் சிலம்பினை விற்கச் சென்று நின்னல் கொலைக்களப்பட்ட கோவலனுக்கு மனேவியாவேன் யான்; என் பெயர் கண்ணகி,' என்றுகூறி நின்ருள். கொற்றவள் குற்றம் உணர்ந்து இறத்தல் கண்ணகியின் வழக்கைக் கேட்ட மன்னவன், ' கள்வனக் கொல்லுதல் கடுங்கோலன்று, அஃது அரச நீதியே' என்று ஒதின்ை. அதுகேட்ட கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதை அறிவித்தற் பொருட்டுத் தன் சிலம்பிலுள்ள பரல் மாணிக்கம் என்ருள். உடனே அரசன் தன் தேவியின் சிலம்பி லுள்ள பரல் முத்தென்று மொழிந்து, கோவலனிட