பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் தேவி 89 மிருந்து பெற்ற சிலம்பைக் கொணர்வித்தான். கண்ணகி அதனேக் கையில் எடுத்து ஓங்கித் தரையில் எறிந்தாள். அப்பொழுது அதனுள் இருந்த மாணிக்கப் பரல்கள் மன்னன் முகமெல்லாம் சென்று தெறித்தன. அவற். றைக் கண்ட அரசன் பெரிதும் கலங்கினன். அவனது வெண்கொற்றக் குடை தாழ்ந்தது. அவன் கையி லிருந்த செங்கோல் தளர்ந்து தரையில் விழுந்தது. அந்தோ | இழிந்த பொற்கொல்லன் சொல்லைக்கேட்ட யானே அரசன்! யானே கள்வன் ! அரும்புகழ் படைத்த பாண்டியர் பெருங்குலம் என் ல்ை ஆருத பழியுற்றதே! இன்ருேடு என் வாழ்நாள் முடிவதாக !' என்று சொல்லித் துயரால் மயங்கி அரியணையிலேயே விழுந்து உயிர் துறந்தான் பாண்டியன். கோப்பெருந்தேவி உயிர்நீத்தல் கணவனகிய பாண்டியன் மயங்கி விழுந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி உள்ளம் குலைந்தாள்; உடலம் கடுங்கினுள் ; ஓவென அலறிள்ை ; கணவனே இழங் தோர்க்குக் காட்டுவ தில்லென்று அவன் இணையடி களேத் தொழுது தானும் வீழ்ந்து மாய்ந்தாள். தந்தை, தாய், உடன்பிறந்தார் போன்றவர்களே இழந்தால் அம். முறையினேயுடைய பிறரைக் காட்டி ஆறுதல் கூறுதல் தகும். கணவனே இழந்த மகளிர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் இயலாதன்ருே ! ஆதலின் கோப்பெருந்தேவி, கணவனே இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று தானும் கணவனுடன் உயிர் நீத்தாள். இங்ங்ணம் கணவனுடன் உயிர்த்ேத கோடி பெருந்தேவி உத்தமக் கற்புடைய பத்தினியாக பாராட்டப்படுகின்ருள். - கோ.-7