பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ, நெடுமாறன் தேவி சைவத்தின் சால்பு எங்காட்டினரும் வணங்கும் இறைவனைத் தென் ட்ைடினர் சிவன் என்று வாழ்த்தி வணங்கினர். ‘தென்னுடுடைய சிவனே போற்றி என்று திருவாசக ஆசிரியர் இறைவனைப் பரவிப் பணிந்தார். சிவபெருமா னைத் தென்பாண்டி நாடன்' என்றே குறித்தருளினர் அவ் ஆசிரியர். இவனேத் தெய்வமாகக் கொண்டு வழி படும் சமயத்தைச் சைவம் என்பர் சான்ருேர். தமிழர் மேற்கொண்டு ஒழுகிய சமயங்கள் பலவற்றுள் தலையா யது சைவமே. அது பழமையும் பெருமையும் வாய்ந்த சமயமாகும். சமணரும் பாண்டியனும் தமிழகத்தே சைவ சமயம் தழைத்தோங்கியிருந்த பண்டை நாளில் வடகாட்டிலிருந்து எண்ணுயிரம் சமணர்கள் தென்னுட்டில் புகுந்தனர். அவர்கள் நாட்டில் பல்லாண்டுகளாக மழையின்மையால் வளமும் நலமும் சுருங்கி மக்கள் மிக்க வாட்டமுற்றனர். அதல்ை தென்னடு புகுந்த எண்ணுயிரம் சமணரும் பாண்டியனைச் சரண் புகுந்தனர். அங்காளில் பாண்டி நாட்டை ஆண்ட மன்னன், மாறன் என்பான். இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனேந்தவன். இவனேச் சுந்தர பாண்டியன் எனவும், கூன்.பாண்டியன் எனவும் புராண நூல்கள் குறிப்பிடும். சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் தாம் பாடிய திருத் தொண்டத் தொகைப் பதிகத்துள்,