பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமாறன் தேவி 91 ' கிறைகொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்." என்று இம் மாறனைப் பாராட்டியுள்ளார். மங்கையர்க்கரசியார் மாதேவியாதல் இப்பாண்டியன் சேரர்களையும் பரவரையும் குறு நில மன்னர் சிலரையும் பாழி, நெல்வேலி, செங்கிலம் முதலான இடங்களில் வென்றவன். இவன் சோழ னுடன் போர் புரிந்து ஒரு பகலில் அவன் தலைநகராகிய உறையூரைக் கைப்பற்றினன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் விளக்குகின்றன. இவனது படைவலிக்கு ஆற்ருது தோற்ருேடிய சோழவேந்தன் மணிமுடிச் சோழன் என்பான். நெடுமாறன் அவனை அடுபோரில் வெற்றி கொண்ட பின்னர் அவன் தன் மகளாராகிய மங்கையர்க்கரசியாரைப் பாண்டியனுக்கு மணம் செய்து கொடுத்தான். மங்கையர்க்கரசியார் நெடு மாறன் கோப்பெருந்தேவியாயினர். அதன் பின்னர்ப் பாண்டியன் சோழனுடன் கொண்ட பகைமை ஒழிந்து நட்புடன் பழகின்ை. பன்ட்ைடு மன்னரும் தனக்குத் திறை செலுத்தப் பாண்டியன் நெடுமாறன் வேந்தர் வேந்தனய்ச் சிறப்புற்று வாழ்ந்தான். அமைச்சர் கவல் நெடுமாறன் ஆட்சியில் அமைச்சராய் விளங்கி யவர் குலச்சிறையார் என்னும் கூர்த்த மதியுடையார். இவர் நாட்டின் கலத்தில் பெரிதும் நாட்டமுடையவர். வடநாட்டிலிருந்து வந்துற்ற சமணர்க்குப் புகலிடம் அளித்த பாண்டியன், அவர்கள் மேற்கொண்டு ஒழுகிய சமண் சமயத்தைத் தானும் பற்றியொழுகத் தலைப் பட்டான். சமணர் வலேப்பட்ட மாறனே மதியமைச்ச